அசப்பில் பார்த்தால் ஐஸ்வர்யா ராயின் க்ளோனிங் மாதிரி தெரியும் தோனி ஹீரோயின் ராதிகா ஆப்தேவுக்கு இப்போது தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள்.
அதில் ஒன்று வெற்றிச் செல்வன். இந்தப் படத்தில் அஜ்மலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே.
‘வெற்றிசெல்வன்’ படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது. இதில் நாயகனாக நடிக்கும் அஜ்மல் மற்றும் ராதிகா ஆப்தே நடிக்கும் காட்சிகளை படத்தின் இயக்குனர் ருத்ரன் படமாக்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. அப்போது ஊட்டியில் கடும் குளிர் நிலவியதால் ராதிகா ஆப்தே நடுங்கினார். அவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள். டாக்டரை அழைத்து வந்து முதல் உதவி சிகிச்சை அளித்தார்கள்.
இதையடுத்து படப்பிடிப்பு சில மணி நேரங்கள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நினைவு திரும்பி சகஜ நிலைக்கு வந்த ராதிகா ஆப்தே கூறும்போது, ஊட்டியில் இவ்வளவு குளிர் இருக்கும் என நினைக்கவில்லை. இரவு படப்பிடிப்பில் இன்னும் அதிக பனி பெய்ததால் தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்து விட்டேன்,” என்றார்.
ஏங்க ருத்ரன்… அழகான பெண்களை இப்படியா வாட்டுவது!