Home சூடான செய்திகள் உள்ளாடை பராமரிப்பு சில கேள்விகள்…

உள்ளாடை பராமரிப்பு சில கேள்விகள்…

29

a8be34af-8a57-4bce-aef2-cc7c42fc651d_S_secvpf-300x225உள்ளே அணிகிற ஆடைதானே… எப்படியிருந்தால் என்ன?’ என்கிற அலட்சியம் படித்த, படிக்காத எல்லாப் பெண்களுக்கும் உண்டு. வெளியே தெரிகிற உடுப்புகளுக்கும், நகைகளுக்கும், காலணிக்கும் ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தயாராக இருப்பார்கள். உள்ளாடை என்று வரும்போது மட்டும் ஒற்றை ரூபாய் அதிகம் செலவழிக்கக் கூட மனது வராது!
‘வெளியே அணியற டிரெஸ் உங்களை அழகாக் காட்டலாம். ஆனா, சரியான உள்ளாடை மட்டுந்தான் உங்களோட தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் தனிப்பட்ட முறையில எக்ஸ்பீரியன்ஸ் பண்ணணும்’’
‘‘சில வருஷங்களுக்கு முன்னாடி, நியூயார்க்ல நடந்த பிரா ஃபிட்டிங் செஷன்தான் என் தலையெழுத்தையே மாத்தினது. எனக்கான சரியான அளவைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு என்னோட தன்னம்பிக்கை அதிகரிச்சது. ரொம்ப செக்ஸியாவும் சந்தோஷமாகவும் உணர ஆரம்பிச்சேன். அந்த ஃபீலிங்கை என்னை மாதிரியே எல்லாப் பெண்களும் உணரணும்னு ஆசைப்பட்டேன். அதுக்குப் பிறகு நிறைய ஆராய்ச்சிகள்… பயிற்சிகள், உலகம் முழுக்க உள்ள பெரிய பிரா நிறுவனங்களைத் தேடிப் பிடிச்சுத் தெரிஞ்சுக்கிட்ட தகவல்கள்னு கத்துக்கிட்டேன்.
பாரிஸ்லயும் பெல்ஜியத்துலயும் ரெண்டு பிரபல பிராண்டு கம்பெனிகள்ல முறைப்படி பயிற்சி எடுத்துக்கிட்டேன். 2008லேருந்து ஆரம்பிச்சு, 3 ஆயிரம் பெண்களுக்கு மேல சரியான பிரா ஃபிட்டிங்கை அடையாளம் காட்டியிருக்கேன். இதுல பிரபலப் பெண்களும் அடக்கம். 5 வருஷங்களுக்கு முன்னாடி ‘பட்டர் கப்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சேன். இங்கே அத்தனை பிரபல பிராண்டுகளும் கிடைக்கும். அது மட்டுமில்லாம, ஒருத்தரோட சரியான அளவைக் கண்டுபிடிக்கவும்.
‘‘பெண்களை உள்ளே வரவழைக்கிறதே ஆரம்பத்துல பெரிய சவாலா தான் இருந்தது. நம்ம கலாசாரம் அப்படி… தரமான உள்ளாடைக்காக செலவழிக்க அவங்களுக்குள்ள பெரிய மனத்தடை இருக்கு. அப்படிப்பட்ட பெண்களுக்கு முதல்ல விழிப்புணர்வை உருவாக்கி, பிறகு சரியான உள்ளாடையை முயற்சி செய்து பார்க்க வச்சு, வாங்கச் செய்யறது பெரிய சவால்.
‘‘பலருக்கும் தன்னோட சரியான சைஸ் தெரியறதில்லை. பிரான்னாலே பி, சி, டி-னு மூணு கப் அளவுகள்ல தான் வரும்னு நினைச்சிட்டிருக்காங்க. ஆனா, அது ‘ஏ’ முதல் ‘கே’ வரைக்கும் இருக்கறது அவங்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு பிராண்டுக்கும் அளவு வேறுபடும். பிராண்டை மாத்தறப்ப, இதையும் பெண்கள் மனசுல வச்சுக்கணும். உங்களோட பிரா சரியான ஃபிட்டிங்ல இருக்கானு தெரிஞ்சுக்கணுமா? அதை அணிஞ்சதுமே, உங்க உடல் சரியான ஷேப்புக்கு வந்த மாதிரி உணர்வீங்க. அதோட விளைவா, வழக்கத்தைவிட, நீங்க இன்னும் உயரமா, அழகா தெரிவீங்க… ட்ரை பண்ணிப் பாருங்க…’’ என்கிறவர், விரைவில் தனது சொந்த பிராண்டை அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.
உள்ளாடை பராமரிப்பு சில கேள்விகள்…

எத்தனை நாட்களுக்கொரு முறை பிராவை மாற்ற வேண்டும்?
8 முதல் 10 மாதங்களுக்கு ஒரு முறை.
கர்ப்பிணிப் பெண்கள் பிரா அணியலாமா?
நிச்சயம். அவர்களுக்கான பிரத்யேக ‘மெட்டர்னிட்டி பிரா’ அணியலாம். 4வது மாதத்தி லிருந்து, அவர்களது மார்பகங்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். அப்போதிலிருந்தே இதை அணியலாம். 8வது, 9வது மாதத்தில் புதிதாக மாற்றலாம். பிரசவத்துக்குப் பிறகு, தரமான நர்சிங் பிரா அணியத் தொடங்கலாம். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய 6 மாதங்களுக்குப் பிறகு, மறுபடி உங்கள் அளவுக்கேற்ப வழக்கமான பிரா அணிய ஆரம்பிக்கலாம்.
தூங்கும் போதும் பிரா அவசியமா?
தேவையில்லை. உங்கள் மார்பகங்களுக்கும் அந்த சில மணி நேர ஓய்வு அவசியம்.
உடல் எடை கூடினாலோ, குறைந்தாலோ, பிரா அளவும் மாறுமா?
நிச்சயமாக… 2.5 கிலோ குறைந்தாலோ, கூடினாலோ, அதன் பிரதிபலிப்பு உங்கள் மார்பகங்களிலும் தெரியும். ஒரு சிலருக்கு எடை ஒரே சீராக இல்லாமல், திடீரென ஏறும், திடீரென குறையும். அவர்கள் பிரா வாங்கும் ஒவ்வொரு முறையும் அளவை சரிபார்த்துதான் வாங்க வேண்டும்.
எந்த கலர் பெஸ்ட்?
வெள்ளை அல்லது லைட் கலரில் உடை அணிகிற போது, வெள்ளை பிராதான் பெஸ்ட் என நினைத்து அதை அணிவார்கள் பலரும். தவறு. அது அப்படியே பளிச்செனத் தெரியும். அதைத் தவிர்த்து ஸ்கின் கலர் அணியலாம்.
உள்ளாடைகளை வாஷிங் மெஷினில் போடக் கூடாது. குளிக்கிற போது, கைகளால் துவைத்துக் காய வையுங்கள். அப்போதுதான் அதன் வடிவம் மாறாமலிருக்கும். துவைத்ததும் கசக்கிப் பிழியாமல், லேசாக அழுத்தி, தண்ணீரை எடுத்துவிட்டு உலர்த்தவும்.
‘என்னால கையால துவைக்க முடியாது’ என்பவர்கள், மெஷினில் துவைக்கப் போடும் முன், பிராவின் கொக்கியை மாட்டிவிட்டு, உள்ளாடைகளுக்கான பையில் (லிங்கரி வாஷிங் பேக்) போட்டு, வாஷிங் மெஷினில் ‘டெலிகேட் வாஷ்’ செட்டிங்கில் துவைக்கலாம்.
தரமான பிராவை 100 முறை துவைத்தாலும் அப்படியே இருக்கும். தரமற்றது மூன்றாவது முறையிலேயே சுயரூபத்தைக் காட்டும். மடித்து வைக்கிற போது, உல்டாவாக மடிக்கக் கூடாது.
உங்கள் வார்ட்ரோபில் அவசியம் இருக்க வேண்டியவை…
தினசரி உபயோகத்துக்கு…
ஸ்பாஞ்ச் வைத்தது, புஷ் அப் மாடல் என வெளியே செல்கிற போது அணிகிற எதுவும் வீட்டு உபயோகத்துக்கு வேண்டாம். மென்மையான துணியில், உங்கள் மார்பகங்களை உறுத்தாத மாடலே பல மணி நேர உபயோகத்தின் போது பாதகம் இல்லாதது.
டிஷர்ட் அணிகிற போது…
டிஷர்ட் அணிகிற பெண்களுக்குத்தான் உள்ளாடையின் உறுத்தலும், அதன் பிரதிபலிப்பும் தெரியும். டிஷர்ட் அணிகிற போது உபயோகிக்கவென்றே பிரத்யேக பிரா இருக்கிறது. அது அவர்களைக் கூனிக் குறுகச் செய்யாமல் நடமாடச் செய்யும்.
மிகவும் இறக்கமான கழுத்து வைத்த, உடல் தெரியும்படியான உடை அணிகிற போது, ‘டெமி பிரா’ பொருத்தமாக இருக்கும்.
தோள்பட்டை இறக்கமான அல்லது தோள்பட்டையே இல்லாத உடைகளை அணிகிற போது, டிரான்ஸ்பரன்ட் பிரா அணிவதற்கு பதில், ஸ்ட்ராப் இல்லாத பிரா அணியலாம்.
கொஞ்சம் புஷ்டியாக, பூசின உடல்வாகுடன் தெரிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு புஷ் அப் பிரா உதவும்.