Home பாலியல் உள்ளாடை அணிவதில் உங்களுக்கே தெரியாமல் தினசரி செய்யும் 8 தவறுகள்!

உள்ளாடை அணிவதில் உங்களுக்கே தெரியாமல் தினசரி செய்யும் 8 தவறுகள்!

38

Capture உள்ளாடை உடுத்துவதில் என்ன பெரிதாக தவறு செய்துவிட போகிறோம். இரண்டு கால்களை நுழைப்பதில் என்ன தவறு நேர்ந்துவிட போகிறது என அசால்ட்டாக இருக்க வேண்டாம். நமக்கே தெரியாமல் நாம் தினசரி இதில் எட்டு தவறுகள் செய்து வருகிறோம். இதனால், பிறப்புறுப்பு பகுதியில் சரும தொற்றுகள், செரிமான கோளாறு, இரத்த ஓட்டம் தடைப்படுவது போன்ற பல பிரச்சனைகள் உண்டாகின்றன.

நீங்கள் உணவு காரணமாக மட்டும் தான் ஆரோக்கியம் கெடும் என நினைப்பது தவறு. உங்களுக்கே அறியாமல் இதுப் போன்ற விஷயங்களினால் கூட உடல்நல அபாயம் ஏற்படலாம்…

தவறு #1 உங்களுக்கு தெரியுமா? இரவு உறங்கும் போது உள்ளாடை அணியாமல் உறங்குவது தான் சிறந்தது. கொஞ்சம் லூசான, இறுக்கமற்ற உடைகளை அணிய தேர்வு செய்யுங்கள். இதனால், பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாக்கள் தொற்று, அரிப்பு, எரிச்சல் உண்டாகாமல் பாதுகாக்க முடியும்.

தவறு #2 ஃபேப்ரிக் உள்ளாடைகள் அணிபவர்கள், அதை மிக கடினமாக துவைக்க வேண்டாம். இதனால், அதன் எலாஸ்டிக் தன்மை தான் பாழாகும். ஊறவைத்து, கைகளால் அலாசி, காயப்போட்டாலே போதுமானது.

தவறு #3 காட்டன் உள்ளாடைகள்! முடிந்த வரை காட்டன் மெட்டீரியலில் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை உடுத்துங்கள். இது சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். நைலான் வகை உள்ளாடைகள் சருமத்திற்கு ஏற்றதல்ல.

தவறு #4 காலாவதி! உள்ளாடைக்கும் காலாவதி இருக்கிறது. என்னதான் பிடித்த டிசைன், நிறம் என இருப்பினும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உள்ளாடைகளை புதியதாக மாற்ற வேண்டியது கட்டாயம். இல்லையேல், சரும பிரச்சனைகள் வர தான் செய்யும்.

தவறு #5 ஜிம்மிற்கு செல்லும் நபர்கள், உடன் இன்னொரு செட் உள்ளாடை எடுத்து செல்ல மறக்க வேண்டாம். நீங்கள் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்த பிறகு அரை மணிநேரம் இடைவேளையில் குளித்தாலும் கூட, அதற்குள் உடலில் ஓட்டும் எந்த வியர்வை மூலமாக நாள்ப்பட பாக்டீரியா தொற்று ஏற்படலாம்.

தவறு #6 ஷேப்வியர் (Shapewear) என்பது தங்கள் உடலை கட்டுக்கோப்பாக காண்பிக்க பெண்கள் அதிகம் உடுத்தும் உள்ளாடை வகை ஆகும். இது, இரத்த ஓட்டம் மற்றும் செரிமானத்தை பாதிக்கிறது. எனவே, இதை உடுத்துவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

தவறு #7 சைஸ்! உள்ளாடை வாங்கும் போது சரியான சைஸ் பார்த்து வாங்குங்கள். லூசாக இருந்தால் அணியவே முடியாது. ஆனால், இறுக்கமாக வாங்கி அணிவது, இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் தடைப்பட முக்கிய காரணியாக அமைகிறது.

தவறு #8 இது பெண்கள் செய்யும் தவறு. பெண்கள் லேசான உடைகள் அணியும் போது, இறுக்கமான உள்ளாடை அணிவது. வெளியே சற்று கண்கூசும்படி தெரியும். இதற்கு, நீங்கள் பட்டையான ஃப்ளாட் சமடிப்பு கொண்ட உள்ளாடைகளை அணியலாம்.