Home உறவு-காதல் உறவுகளில் பெண்களின் தவறுகள்

உறவுகளில் பெண்களின் தவறுகள்

19

எந்தவொரு உறவிலும் அதற்கே உரிய தவறுகள், முடிவுகள் மற்றும் மனக்கசப்புகள் என்பன காணப்படும்.

இது சில சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கலாம். இருந்தும், தவறுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், உங்களுடைய துணைவர் உங்களை விட்டுச் சென்று விடக்கூடிய நிலையை தோற்றுவித்துவிடலாம்.

இந்த வகையில,பெண்கள் உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில உள்ளன. அதிலும் தங்களுடைய துணைவரின் வாழ்க்கையை நாசப்படுத்துகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இந்தத் தவறுகளை செய்கிறார்கள் என்பது தான் கொடுமை.

இது போன்று சாதாரணமாக உறவுகளில் நடக்கும் தவறுகள் காரணமாக, தம்பதிகள் பிரிந்து விடும் நிலை உருவாகின்றது.

உறவுகளில் பெண்கள் செய்யும் தவறுகள் இயற்கையாகவே ஏற்படுகின்றன. இது தொடர்பில் இரு பாலாரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும, ஆண்கள் பெண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை மற்றும் பெண்கள் ஆண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை என்பது தான் உலகத்தின் முன் வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

தங்களுடைய துணைவர் இந்த விஷயங்களைப் பற்றி உணர்ந்திருக்கிறார், வருத்தப்படுவார் என்பதைப் பற்றித் தெரியாமலேயே பெண்கள் தங்களுடைய தவறுகளை செய்து கொண்டிருப்பார்கள்.

எனினும், ஒரே தவறை பலமுறை திரும்பத் திரும்ப செய்யும் போது, அது ஒரு பழக்கமாக மாறி விடுவதால், அந்த தவறுகளிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகி விடுகிறது.

காதல் வாழ்க்கையில் மனமுடைந்து போவதையோ அல்லது கண்ணீரையோ சந்திக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. நீங்கள் ஒரு மிகப்பொருத்தமான ஜோடியாக இருக்கலாம்.

ஆனால் இந்த தவறுகளை செய்யும் போது, உங்களது அன்புக்குரியவர் விலகிச் செல்ல நேரிடும்.

எனவே, உங்களிடமிருந்து ஆண்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு செயற்பட்டால் உங்களுடைய உறவை நெடுங்காலத்திற்கு மகிழ்ச்சியோடு கொண்டு செல்ல முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.