உருளைக்கிழங்கு – அரை கிலோ
ப்ரெட் – 5 அல்லது 6
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லித் தழை – அரைக் கட்டு
ரொட்டித் துண்டுகள் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – சிறிதளவு
தேவையானவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கினை கழுவி இரண்டாக நறுக்கி வேக வைக்கவும்
கிழங்கு வெந்ததும் எடுத்து நன்கு மசித்து வைக்கவும்.
ப்ரெட் துண்டுகளை 5 நிமிடம் வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
ஊறிய ப்ரெட் துண்டுகளை நீரினைப் பிழிந்து எடுத்து பிசைந்து வைக்கவும்.
கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் ப்ரெட், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கையினால் வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
வெளியே மொறுமொறுப்பாவும் உள்ளே சாஃப்டாகவும் உள்ள உருளை டிக்கி ரெடி.