ஜேர்மனியைச் சேர்ந்த யுவதி ஒருவர் உயிருள்ள பார்பி பொம்மையாக மாறுவதற்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டு தனது உடலமைப்பை மாற்றிக் கொண்டுள்ளார்.
மார்ட்டினா எனும் 26 வயதான இந்த யுவதிக்கு முன்னர் தனது உடலமைப்பு குறித்து அதிருப்தி கொண்டிருந்தார்.
அவர் 17 வயதானவராக இருந்தபோது அவரை ஒரு மொடல் அழகியாகுமாறு அவரின் காதலர் கூறினாராம்.
பின்னர் விமானசேவை நிறுவனமொன்றில் விமானப் பணிப்பெண்ணாக அவர் இணைந்தார். ஆனால், அவருக்கு வாழ்க்கையில் திருப்தி ஏற்படவில்லை.
பார்பி பொம்மையின் தோற்றத்தை தான் பெற வேண்டும் என அவர் விரும்பினார்.
அந்த விமானப் பணிப்பெண் சேவையின் போது இயற்கையான உடலமைப்புடன் இருக்க வேண்டும் என அவர் அந்நிறுவனத்தால் எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால் அப்பணியின் மூலம் கிடைத்த பணத்தை பயன்படுத்தி சத்திரசிகிச்சை மூலம் தனது கால்கள், இடை ஆகியவற்றில் கொழுப்பை அகற்றி மெல்லியதாக்கிக்கொண்டார்.
2012 ஆம் ஆண்டு தனது மார்பகங்களையும் பெரிதாக்கிக் கொண்டார். இச்சத்திர சிகிச்சைகளுக்காக சுமார் 58 இலட்சம் ரூபாவை அவர் செலவிட்டுள்ளாராம்.
பே வோட்ச் தொலைக்காட்சித் தொடரில் வரும் நடிகை பமேலா அண்டர்சனின் ரசிகை எனக் கூறும் மார்ட்டினா தற்போது ஐரோப்பா, அமெரிக்காவில் மொடலாக பணியாற்றுகிறார்.