உயரம் பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, இல்வாழ்க்கையிலும் கூட சிலருக்கு இடையூறாக இருக்கும். உயரம் குறைவாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டல் செய்வர்கள்.
அதே போல உயரமாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டலோடு சேர்த்து உயரமான இடத்தில் எந்த வேலையாக இருந்தாலும் நம்மை தான் அழைத்து தொல்லைக் கொடுப்பார்கள்.
இப்படி ஓர் மனிதனை அல்லோலப்படுத்தும் உயரம், காதலிலும் சும்மா இல்லை. பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் இருபாலர் மத்தியிலும் உயரமானவர்கள் மீதான அதீத விருப்பம் இருக்க தான் செய்கிறது. அப்படி உயரத்தில் என்ன தான் இருக்கிறது. அதிலும், உயரமான பெண்கள் மீது ஆண்கள் அதிகமாக விருப்பம் கொள்வது ஏன்?
தன்னம்பிக்கை:
பொதுவாகவே உயரமான பெண்கள் தன்னம்பிக்கை அதிகமாக உள்ளவர்கள் என்ற கருத்து நிலவுகிறது. மேலும், இவர்களது உடல்மொழி இதை அடிக்கடி வெளிக்காட்டுகிறது. இது, ஆண்கள் அதிகமாக இவர்கள் மீது ஈர்ப்புக் கொள்ள வைக்கிறது.
மாடல் லுக்:
உயரம் குறைவான பெண்களோடு ஒப்பிடுகையில், உயரமான பெண்கள் சற்று மாடல் போன்றே தோற்றமளிப்பதும் கூட, ஆண்கள் இவர்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்வதற்கான காரணியாக இருக்கிறது.
உணர்ச்சி அலைகள்:
மேலும், உயரமான பெண்களுக்கு கால்கள் சற்று நீளமாக இருக்கும். இது, ஆண்களை உணர்ச்சி ரீதியாக அவர்கள் மீது அதிகமான விருப்பத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாகவே பெண்கள் ஸ்கர்ட் போன்ற மாடர்ன் உடைகள் அணிந்து வரும் போது சற்று செக்ஸியாக தோற்றமளிப்பது உண்டு. இது ஆண்களின் மனதில் அலைகள் எழ காரணமாகவும் இருக்கும். இதே, உயரமான பெண்கள் இதுப்போன்ற உடையணிந்து வருகையில், அந்த அலைகள் சுனாமியாக மாறிவிடுகிறது.
50:50
அனைத்திற்கும் மேலாக, எந்த வகையான உடை அணிந்தாலும் சரி, உயரமான பெண்களுக்கு அது எடுப்பாக இருக்கும். புடவையில் தெய்வீகமாகவும், மாடர்ன் உடையில் மாடல் அழகி போலவும் 50:50-ல் எல்லா ஆண்களும் ரசிக்கும் வகையில் இருப்பதால் தான் ஆண்களுக்கு உயரமான பெண்கள் மீது ஓர் அதீத பிரியம்!