கேள்வி…
நான், 34 வயது பெண்; 24வது வயதில், திருமணம் ஆனது. மூன்று ஆண்டு காதலித்து, ‘அலைபாயுதே’ சினி மா பாணியில், திருமணம் செய்து கொ ண்டோம். அவர் முஸ்லிம், நான் இந்து. இருவரது வீட்டிலும் சம்மதம் கிடைக் காததால், வீட்டைவிட்டு வெளியேறி சி றப்பு திருமண சட்டத்தின்கீழ், திருமணத் தை பதிவுசெய்தோம். தனி வீடு எடுத்து, எங்கள் வாழ்க்கையை துவங்கினோம். நான் இஸ்லாமிய பெண்ணாகவே வாழ த்துவங்கினேன். பெய ரைக் கூட, யாஸ்மின் என்று மாற்றி விட்டார். ஆனால், அரசு பதிவில், பெயரை மாற்ற நான் அனுமதிக்கவில்லை.
நாங்கள் இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தோம். ஆனால்,
ஒரு ஆண்டிலேயே அவர் வேலையை விட்டு, கூரியர் பிசினஸ் ஆர ம்பித்தார். இதில், மூன்று லட்சம் ரூபாய் கடனா கி விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு குழந்தையும் தங்கவில்லை. அச் சமயத்தில் கூரியர் பிசினசை விட்டுவிட்டு, நண்பர்கள் ஆலோசனை ப்படி வேறொரு பிசினசில் கால் வைத்தார். இதிலும் கடனை அடை க்க முடியாததுடன், மேலும், கடன் ஏறியது.
என்னுடைய குறைந்த சம்பளத்தால், எதையும் சமாளிக்க முடியவி ல்லை. அவரின் சித்தி மகளின் கணவர், சவுதி செல்ல போவதாக கூறினார். உடனே, என் கணவரும் சவுதி செல்ல விரும்பினார். வே று வழியில்லாததால், அதற்கு சம்மதித்தேன்.
என் கஷ்டத்தை சொல்லி, என் மூத்த சகோதரியிடம், ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டேன். அவரும் நிலைமை புரிந்து, உதவினார். சவுதியில் என் கணவருக்கு, குறைந்த சம்பளம் என்றாலும், அது, கடனை அடைக்க உதவியது.
அம்மா எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அது, என் கணவருக் கே தெரியாமல், ‘பேஸ்புக்’கில் கணக்கு வைத்திருந்தேன். ஆரம்பத் தில், என் நிஜ பெயர் மற்றும் வயது, 29 என, தெரிவித்த போது, யாரு ம் என்னுடன் பேச முன் வரவில்லை. அதனால், விளையாட்டிற்கா க, பொய்யான கணக்கு துவங்கி, அதில், 24 வயது, திருமணம் ஆகா த பெண் என்று, பதிவு செய்தேன். அலுவலகத்தில் வேலை குறைவா க இருக்கும் போது, ‘பேஸ்புக்’கில் பேசுவேன். என் புகைப்படம், மொபைல் எண் எதையும் தர மாட்டேன்.
நட்புடன் பலரிடம் பேசியுள்ளேன். அப்படி ஒருவரிடம் பேசினேன். அவர் தன்னுடைய வயது, 28 என்றார். நான், ‘திருமணம் ஆக வில் லையா…’ என்று கேட்டதற்கு, ‘பெற்றோர் இல்லை; ஒரே அக்கா மட்டும் தான். எனக்கு நியூசிலாந்தில் வேலை; விடுமுறையில் இந் தியா வந்து இருக்கிறேன். இரண்டு மாதத்தில் மீண்டும் போய் விடு வேன்…’ என்று கூறினார்.
அந்த பத்து நிமிட பேச்சுக்கு பின், அவரிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.
இரண்டு மாதத்திற்கு பின், மீண்டும் அவரே தொடர்பு கொண்டார். அதன்பின், இருவரும் அடிக்கடி போனில் பேச துவங்கினோம்.
ஒரு நாள், என்னை திருமணம் செய்ய விரும்புவதாகவும், நியூசிலா ந்து சென்று வந்த பின், வீட்டில் வந்து பெண் கேட்பதாகவும் கூறினா ர். எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி ஏற்பட்டாலும், அவரிடம் பேசுவது, எனக்கு பிடித்து இருந்தது.
அதனால், நானும் விளையாட்டிற்காக, அவரை காதலிப்பதாக கூறினேன்.
‘இப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கணவனாக ஏன் வரவில்லையே…’ என்று, நினைத்துக் கொண்டேன். ஏற்கனவே, கணவர் மேல் இருந்த பிடிப்பின்மை, ஒரு நல்லவனை ஏமாற்றுகிறேனே என்ற குற்ற உணர்ச்சி என, நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
ஒரு நாள் தைரியத்தை வரவழைத்து, என்னைப் பற்றிய உண்மை களை கூறினேன். மிகவும் அமைதியாக கேட்டார். பின், ‘அழாதே… விளையாட்டாக செய்து விட்டாய்; மறந்து விடு. உனக்கு, ஏதாவது உதவி தேவை என்றால், என்னை மறக்காதே…’ என்றார்.
ஒரு வழியாக இந்தப் பிரச்னை முடிந்ததாக எண்ணினேன். ஆனால், அடுத்த நாள் போன் செய்து, ‘நான் வெளிநாடு போகும் வரையாவது, என்னுடன் பேசிக் கொண்டு இரு; இல்லையென்றால், நான் பைத் தியமாகி விடுவேன். எனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனாலும், உன்னுடைய தொடர்பு எனக்கு வேண்டும்…’ என்றார்.
நான் அதற்கு மறுத்து விட்டேன்; ஏனெனில், என் கணவர் இது போ ன்ற நட்பை அனுமதிக்க மாட்டார். மேலும், ‘அவர் இன்னும் சில நாட் களில் இந்தியா வந்து விடுவார்…’ என்று கூறினேன். ஆனால், என் மனம், உண்மையில் அவரை விட விரும்பவில்லை. அவருக்காக ஏங்க துவங்கியது. அவர், ‘உன் கணவர் வந்த பின், விவாகரத்து செ ய்து விட்டு, என்னை திருமணம் செய்து கொள்வாயா…’ என்று கேட் டார். என் மனம், இந்த கேள்விக்காக ஏங்கியது போல, உடனே, சம்மதம் சொல்லி விட்டேன்.
அடுத்த நாள் நாங்கள் சந்தித்தோம்; இருவருக்கும் ஒருவரை ஒருவ ர் பிடித்து விட்டது. அடுத்து வந்த நாட்களிலேயே தனிமை அமைந் தது. அப்போது தான் தெரிந்தது, அவர் ஆண்மை அற்றவர் என்று!
நான் சொன்ன பொய்க்கு பிராயசித்தமாக, இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்று, எண்ணினேன்; ஏன் என்றால் பெற்றோரும் இல் லை; ஒரு பெண்ணை திருமணம் செய்யும் தகுதியும் இல்லை என்ப தால், அவருக்கு மனைவியாக இல்லாமல், ஒரு தாய் ஸ்தானத்தில் வாழ முடிவெடுத்தேன். அவரும் என்னை அப்படியே நினைப்பதாக கூறினார். அதனால், அவரை முழுவதுமாக நம்பினேன். ஊரிலிருந் து வந்த கணவரிடம், எனக்கு, ‘இந்து மதத்தின்படி வாழ ஆசையாக உள்ளது…’ என்று கூறி, ஏற்கனவே திட்டமிட்டபடி பிரச்னையை துவ ங்கினேன். எனக்கு நன்றாக தெரியும்… மனைவியா, மதமா என்றா ல், மதம் என்று தான், என் கணவரிடம் இருந்து பதில் வரும் என்று! நான் கேட்டதும், அதே பதில் தான் வந்தது.
கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டேன்.
என் மூத்த சகோதரியிடம், என் காதலனை பற்றி கூறினேன். அவரு க்கும், நான் மதம் மாறியது பிடிக்கவில்லை என்பதால், உடனே சம்மதித்து விட்டார். எங்கள் இருவருக்கும் என் மூத்த சகோதரியே கோவிலில் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தை பதிவு செய் ய சென்றபோது தான், தன் பெற்றோர் உயிருடன் இருக்கும் விஷ யத்தையே சொன்னார்.
எங்கள் திருமணம், அவரது பெற்றோருக்கு தெரிந்து, பெரிய பிரச் னை ஆகி விட்டது. மீண்டும் நியூசிலாந்து சென்று, ஒரு ஓட்டலில் வேலை செய்ய போவதாக கூறினார்.
என் அக்காவிடம், ‘கொஞ்ச நாள், இவள் இந்தியாவிலேயே இருக்க ட்டும், பின் அழைத்துக் கொள்கிறேன்…’ என்று வாக்களித்தார். என் னையும், வேலைக்கு போக வேண்டாம் என்றும், மாதா மாதம் பண ம் அனுப்புவதாகவும் கூறினார்.
ஆனால், அவர் கூறியபடி எதுவுமே நடக்கவில்லை. பணமும் ஒழுங் காக வரவில்லை; அவரும் இந்தியா திரும்புவதாக தெரியவில்லை. ஓரளவு வசதியான அவரது பெற்றோர், அவருக்காக செலவு செய்த பணத்தை, இப்போது, திரும்ப கேட்க ஆரம்பித்துள்ளனர். என்னையு ம், அவரிடமிருந்து பிரிக்க முயல்கின்றனர்.
இதற்கிடையில், இமிக்ரேஷன் விசாவுக்காக என் கணவர் அனுப்பி ய விண்ணப்பத்தில், தன்னை திருமணம் ஆகாதவர் என்று கூறியிரு ந்தது தெரிந்து அதிர்ந்து, அவருக்கும், எனக்கும் திருமணம் ஆனதற் கு சாட்சியாக புகைப்படம் மற்றும் திருமண பத்திரிகையை, இமிக் ரேஷன் ஆபீசுக்கு அனுப்பி, அவரது விசாவை, தள்ளுபடி செய்ய வேண்டினேன்.
இதைஅறிந்து, அவர் என்மீது கோபப்பட்டார். ‘நியூசிலாந்தில் வே லையை விட்டுவிட்டு, இந்தியா திரும்பி வந்தாலும், வேலைக்கு செ ல்ல மாட்டேன்; உன் அக்காவிடம் கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பணம் வாங்கித் தர வேண்டும்…’ என்றும் கூறுகிறார்.
ஒரு வேளை, என் கணவர் இன்னொரு முறை, விசாவுக்கு விண்ண ப்பித்து, கிடைத்து விட்டால், என்னை பழிவாங்குவதாக நினைத்து, அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். சட்ட உதவியுடன் என் கணவரை, இங்கு வரவழைக்க முடியுமா அல்லது விவாகரத்துதா ன் தீர்வா? எனக்கு தெரியாமல், அவரால் அங்கு இன்னொரு திரும ணம் செய்ய முடியுமா? நான், இங்கு பதிவு செய்த திருமணத்தை காரணம் காட்டி, என் கணவருடன் நான் வாழ விரும்புவதாக சொல் லி, அவரை இங்கு வரவழைக்க வழி இருந்தால் கூறுங்கள் அம்மா.
நீங்கள் தான், ஒரு நல்வழி கூற வேண்டும்.
பதில்…
வண்டி வண்டியாய் பொய்களை விதைத்தால், டன் கணக் கில் பொய்களைத்தான் அறுவடை செய்ய முடியும் என்பதை மறந்து விட்டாயே! ஆண்மையற்ற, ஒரு வக்கிர மேதையுடன், நீ குடும்பமும் நடத்த வேண்டாம்; அவன் வேலையை கெடுத்து, அவனை, நீ பழிவாங்கவும் வேண்டாம்.
அவனிடமிருந்து விவாகரத்து பெற, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய். தூதரகம் மூலம், அவனை இந்தியாவுக்கு வரவழை. அவனிட மிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, அவனை சுதந்திரமாக விட்டு விடு. உன் முதல் காதலும் பொய்; இரண்டாவது காதலும் பொய். உன் முதல் கணவனை நீ உண்மையாகவே காதலித்திருந்தால், உனக்கு இன்னொரு ஆண் மேல் ஈர்ப்பு வந்திருக்காது. முதல் காதல், உடல் கிளர்ச்சியால் ஏற்பட்டது என்றால், இரண்டாவது காதலுக்கு, வசதியான வாழ்க்கைக்கு நீ ஆசைப்பட்டதே காரணம். உன் இரண் டாவது காதலன் வசதியானவன் என்பதாலேயே எதையும் யோசிக் காமல், அவ்வளவு அவசரமாக உன்னால் விவாகரத்து பெற முடிந் தது.
‘அவசரத்தில் திருமணம் செய்து, அவகாசமாய் அழு’ என்பது கிரா மத்து பழமொழி; அது, உன்னைப் பொறுத்தவரை உண்மையாகி விட்டது. உன் வாழ்க்கை இளைய தலைமுறை பெண்களுக்கு, ஒரு பாடம். ஆண்மையற்றவனை மணந்து, தாயாய் இருப்பேன் என கூறுவதெல்லாம் வெற்றுப் பேச்சு. தாம்பத்யம் இல்லாத குடும்ப வாழ்க்கை, உப்பு சப்பில்லா பண்டம்.
இரண்டாம் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற பின், அடுத்த திருமணத்தை பற்றி உடனே யோசியாதே. உனக்கு நேர்மையான ஆணை தேர்ந்தெடுக்கும் திறமை இல்லை. தொலைதூர கல்வி மூலம் மேற்கொண்டு படி. பொருளாதாரத்தில் தன்னிறைவையும், கல்வி அறிவையும், மன முதிர்ச்சியையும் அடைந்த பின், உன்னை புரிந்து கொண்ட நல்ல ஆண் மகன் கிடைத்தால், நன்றாக யோசி த்து, மணம் புரிந்து, இல்லற தர்மத்தை உணர்ந்து, உண்மையாக வாழ முயற்சி செய். வாழ்த்துகள்!