உடல் பருமன் என்பது பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், அதில் முக்கியமான பாதிப்பு குழந்தை பாக்கியத்தைத் தடுப்பது தான். உடல் பருமன் பெண்கள் கருவுறுதலை மட்டும் பாதிப்பதில்லை ஆண்களின் விந்து உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் குழந்தை பாக்கியம் தாமதாக நடப்பதுடன், பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமின்றி கருசிதைவும் ஏற்படும் நிலையும் உள்ளது. உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியாவதில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் சினைப்பையில் கட்டி ஏற்பட்டு கருவுறுதல் மேலும் சிக்கல் அடைகின்றது.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய் பாதிப்பும் உடல் பருமனால் ஏற்பட்டு கருவுறுதலை பாதிப்பதுடன், சில நேரத்தில் பிரசவ காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. உடல் பருமன் ஹார்மோன் குறைப்பாட்டைக் ஏற்படுத்தும். இதனால் கருமுட்டை மற்றும் விந்து உற்பத்தி பாதிப்பு அடைகின்றது.
ஆகவே குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தால், தயவு செய்து உடல் எடையில் கவனம் கொள்ளுங்கள். அதற்காக பலவற்றை முயற்சி செய்து உடல் எடையை அதிகமாக குறைத்தாலும் ஆபத்து தான். கூடுதல் உடல் எடை குறைவும், குழந்தை பாக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே சரியான உடல் எடை குழந்தை பாக்கியம் பெற மிக மிக அவசியம்.