Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் கட்டுப்பாடு

உடல் கட்டுப்பாடு

28

இன்று பல பேர் உடல் கட்டுப்பாட்டை பற்றி கவலைப்படுவதே இல்லை. உடல் பருமான பின்னர் அதனை குறைக்க படாதபாடு படுகின்றனர். காரணம் அளவான சாப்பாடு, முறையான உடற்பயிற்சி இவற்றையெல்லாம் கடை பிடிக்காததே. 35 வயது உடையவர்கள் கூட இன்றைய கால கட்டத்தில் உடல் பருமன் அதிகம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன ? அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றிய குறிப்புக்கள்.

உடலில் கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக கூட இருக்கலாம். அளவுக்கு அதிகமான சாப்பாடு, கொழுப்பு அதிகம் உள்ள உணவை அதிகம் உண்பது . இவையெல்லாம் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கக் கூடும். அளவாகச் சாப்பிட்டு உடல்பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பின் அளவு ரத்ததில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும் . தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது நல்லதாகும்.கொழுப்பு அதிக அளவில் உள்ள மட்டன், முட்டைக்கு போன்றவற்றிக்கு தடைபோட வேண்டும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கரு கூடவே கூடாது. அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் வாரம் ஒரு முறை சிக்கன் சாப்பிடலாம் .

அடிக்கடி மீன் சாப்பிடலாம். எண்ணெய் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது. தவிக்க முடியாத சூழ்நிலையில் , மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கான கால நேரம் அதிகமாகும்.

பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். கொழுப்பை குறைக்க நடைப் பயிற்சி அவசியமான ஒன்றாகும். ஏதோ பேருக்கு நடப்பது போதாது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 45 நிமிடமாவது நடக்க வேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும் .
எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கூடவே கூடாது.