Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம்

உடல் ஆரோக்கியத்திற்கு அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம்

25

வளர் இளம்பருவத்தினர் மட்டுமல்லாமல், எல்லா வயதினருக்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். மிதமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்பைக் குறைக்கும்;

மன அழுத்தத்தைக் குறைக்கும்; தசைகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து உறுதிப்படுத்தும். ஒரு காலத்தில் 40-50 வயதில் வந்த மாரடைப்பு, சர்க்கரை நோய் இன்று 20-30 வயதிலேயே வந்துவிடுகிறது. இளம்பருவத்தில் தங்களுடைய உடலைப் பராமரிக்கத் தவறியதன் விளைவுதான் இது.

13 வயதில் இருந்து 19 வயதுக்குட்பட்ட பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சியே இல்லாமல் போனதால், மன உளைச்சல், உடல் பருமன், இதய நோய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு ஆட்பட்டு வருவதாக சமீபத்திய ஆய்வும் தெரிவிக்கிறது.

முறையான உடற்பயிற்சியினால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எனவே குழந்தைகள், இளைஞர்களை கிரிக்கெட், ஃபுட்பால், வாலிபால், நீச்சல் போன்ற வெளிப்புற விளையாட்டுக்களில் ஈடுபட அதிகம் ஊக்குவிக்க வேண்டும்.