Home உறவு-காதல் உடலுறவுக்கு பின் கொஞ்சி விளையாடினால் வேகமாக கருத்தரிக்கலாம் என்பது தெரியுமா?

உடலுறவுக்கு பின் கொஞ்சி விளையாடினால் வேகமாக கருத்தரிக்கலாம் என்பது தெரியுமா?

24

இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை முக்கிய காரணங்களாகும். அதுமட்டுமின்றி, ஆண்கள் எப்போதும் உடலுறவு கொண்ட பின் கொஞ்சி குலாவுவதில்லை என்று பெரும்பாலான பெண்கள் புகார் தெவிரிக்கின்றனர்.

இச்செயலால் நிறைய பெண்களும் வருத்தப்படுகின்றனர். ஆனால் கருத்தரிக்க வேண்டுமானால், அதற்கு உடலுறவிற்கு பின்னான கொஞ்சல்கள் மிகவும் முக்கியமானது. இதை ஒவ்வொரு ஆண்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பின்னணியில் நிறைய காரணங்களும் உள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஹார்மோன் வெளியீடு

உச்சக்கட்ட இன்பத்தை அடையும் ஆணின் உடலில் டோபமைன் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும். அதுவே பெண்ணிடம் என்றால் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும்.

ஹார்மோன் அதிகமாக சுரக்கும் தருணம்

உடலுறவு கொண்டு உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது மட்டும் தான் பெண்களின் உடலில் நல்ல மனநிலையை உணர வைக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கப்படும் என்று நினைக்காதீர்கள். உடலுறவுக்கு பின்னும் அப்பெண்ணிடம் அந்த ஹார்மோன் அதிகமாக வெளியிடப்படும்.

ஹார்மோன் செயல்

பெண்களின் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தம்பதியருக்குள்ளான பந்தத்தை வலுப்படுத்தும். தம்பதிகளுக்குள் பந்தம் வலிமையடையும் போது, ஒரு பெண்ணின் மனம் குழந்தையைச் சுமக்க தயாராகும். இப்படி நேர்மறை எண்ணங்கள் உடலில் அதிகரிக்கும் போது, வேகமாக கருத்தரிக்கக்கூடும்.

இதர நன்மைகள்

உடலுறவுக்கு பின் ஆண்கள் மனைவியைக் கொஞ்சுவதால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். அதில் பெண்களின் இனப்பெருக்க சுழற்சி சரியாக நடைபெறும், குழந்தை உருவாக உதவியாக இருக்கும் மற்றும் தாய்ப்பால் உற்பத்தி சுழற்சி சரியாக தூண்டப்படும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியம்

முக்கியமாக உடலுறவு கொண்ட பின் துணையுடன் கொஞ்சி விளையாடுவதால், அப்பெண் நல்ல பாதுகாப்பையும், சௌகரியத்தையும் உணர்ந்து, எளிதில் கருத்தரிக்க உதவும். அதுமட்டுமின்றி, அது இருவருக்கும் ஓர் நல்ல தருணமாகவும் இருக்கும்.