Home பெண்கள் பெண்குறி xdoctor9 உடலுறவு கொள்ள பெண்ணுறுப்பு தயாரா என்பது எப்படி காண்பது ?

xdoctor9 உடலுறவு கொள்ள பெண்ணுறுப்பு தயாரா என்பது எப்படி காண்பது ?

178

நீண்டநேர உடலுறவு தொடர்பான கேள்விகள் அதிகம் வந்திருக்கின்றன. எனவே அனைத்துக்கும் பொதுவாக சில அடிப்படைத்தகவல்களை தரவேண்டியிருக்கிறது.

உடலுறவு சாதாரணமாக 15 இலிருந்து 20 நிமிடங்களுக்கு நீடிக்கும். இதில் உடலுறவுக்கு முன்னரான விளையாட்டுக்களைத்தவிர புணர்ச்சி வெறும் 3 முதல் 5 நிமிடங்களே.

எனவே வாசகர்கள் தாங்கள் பார்த்த நீலப்படங்கள் போல் இது இடம்பெறவேண்டும் என எதிர்பார்க்ககூடாது. பார்வையாளர்களை கவர்வதற்காக எப்போதும் படங்களில் மிகைப்படுத்தல்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

*பரவலாகவே தினமும் உடலுறவில் ஈடுபட்டால் பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும் அல்லது இலகுவாகிவிடும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
*அதே போல குழந்தை பிறந்து பிறகும் கூட பெண்களின் பிறப்புறுப்பு சற்று பெரியதாகிவிடும் என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது.
*இவை அனைத்துமே வெறும் அனுமானங்களாக தான் இருக்கின்றன. பெண்ணுறுப்பு எதனால் இருக்கமைடைகிறது, இலகுவாகிறது என்று பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை.
*சில காரணங்களால், பெண்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் மட்டுமே அவர்களது பெண்ணுறுப்பில் மாற்றம் ஏற்படும்….
எலாஸ்டிக் தன்மை பெண்ணுறுப்பானது எலாஸ்டிக் தன்மை உடையது. இது விரியவும் செய்யும், குறுகவும் செய்யும். ஏறத்தாழ வாயை போல.
*இது எவ்வளவு பெரிதானாலும் மீண்டும் இயல்பு நிலைக்கு சுருங்கும் தன்மைக் கொண்டது. இப்படி தான் பெண்ணுறுப்பு இயற்கையாக செயல்படுகிறது.
*பதட்டம் பெண்களுக்கு பதட்டம் ஏற்படும் போது பெண்ணுறுப்பு தசை வளையும் இறுக்கமாகிறது. பெண்களின் பதட்டமான நிலைக்கு அவர்களது பெண்ணுறுப்பு வளையம் பதிலளிக்கிறது (Response) என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
*உச்சம் அடையும் நிலை பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, அவர்களாக உச்சம் அடையும் நேரத்தில் பெண்ணுறுப்பு இலகுவாகும்.
*இந்த தருணத்தில் ஆண்கள் எளிதாக உடலுறவில் ஈடுபட முடியும் என்று கூறப்படுகிறது.
*பெரிதாவதில்லை பெண்கள் உச்சம் அடையும் போது பெண்ணுறுப்பு பெரிதாவதில்லை, அந்நிலையில் அது எலாஸ்டிக் தன்மையை போல விரிவடைகிறது. மற்றப்படி பெண்ணுறுப்பு உடலுறவில் ஈடுபடும் போது எப்போதும் பெரிதாகாது.
*இறுக்கமாக இருத்தல் சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், ஒன்று அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும், அல்லது அவர்கள் போதிய அளவு தூண்டிவிடப்படாமல் இருந்திருக்க வேண்டும்.
*ஆண்கள் உடலுறவின் போது உச்சமைடைய இரண்டு நிமிடங்கள் போதும், ஆனால், பெண்கள் உடலுறவின் போது உச்சம் அடைய குறைந்தது 30 நிமிடங்களாவது ஆகும்.
*பெண்ணுறுப்பு இலகுவாக உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், அவர்கள் இலகுவாக உணர, உடலுறவில் ஈடுபடும் முன்னர் கொஞ்சி விளையாடுதலில் ஈடுபட வேண்டும் என உடலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
*தன்னிலை திரும்பும் பெண்கள் உச்சம் காணும் போது விரிவடையும் பெண்ணுறுப்பு, தானாக சிறிது நேரத்தில் தனது இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். பெண்கள் உச்ச நிலை உணர்வு குறையும் போது மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு பெண்ணுறுப்பு திரும்பிவிடுமாம்.
*குழந்தைப்பேறு பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு, குறிப்பாக சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு சில காலம் பெண்ணுறுப்பு சற்று பெரிதாக தோற்றமளிக்கும்.
*இதற்கு காரணம் குழந்தைப்பேறு தான். குழந்தை பிறந்த பிறகு பெண்ணுறுப்பு இயல்பு நிலை திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகும்.
சிலருக்கு ஆறு மாதங்கள் ஆகலாம்…