Home பாலியல் உடலுறவில் ஈடுபடும் போது மனைவியுடன் செய்ய வேண்டியவை, கூடாதவை

உடலுறவில் ஈடுபடும் போது மனைவியுடன் செய்ய வேண்டியவை, கூடாதவை

49

images (1)உடலுறவு என்பது மிகவும் சாதாரணமானது மற்றும் இயற்கையானது. இதை மிகைப்படித்த ஏதுமில்லை. ஆனால், செயல்படுத்த நிறைய வழிகள் இருக்கின்றன. இது ஒருவர் பற்றிய விஷயமல்ல. இருவர் மத்தியில் நிகழும் இந்த நிகழ்வுக்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும். மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி இருவரும் ஒத்துழைக்க முடியும் என்றால் மட்டுமே நிகழ வேண்டிய செயல்பாடு இது.

நிறைய பேர், கெஞ்சி கூத்தாடியாவது துணையுடன் உடலுறவில் ஈடுப்பட்டுவிட வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அவர்களும் இறக்கப்பட்டு ஒப்புக்கொள்ளலாம். ஆனால், கண்டிப்பாக உங்களால் முழு நிறைவாக ஈடுபட முடியாது. அப்படி முழு நிறைவுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் எனில், எதை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என அறிதல் மிகவும் முக்கியம்…

உடலை அறிதல்

எல்லா பெண்களுக்கும் உடல் ஒரே மாதிரி இருந்தாலும், உடல்நிலை என்று ஒன்றிருக்கிறது. எனவே, முதலில் உங்கள் துணையின் உடலை பற்றி அறிதல் வேண்டும். அவர்களுக்கு எங்கு வலி ஏற்படும், எப்படி செய்தால் வலி ஏற்படாது என்று அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பார்வை முக்கியம்

காதலும் சரி, உடலுறவும் சரி ஓர் பார்வையிலேயே கொண்டு வந்துவிட முடியும். வற்புறுத்தி, கெஞ்சி, கூத்தாடி வர வைப்பது உங்களை எப்போதும் திருப்தி படுத்தாது

அவர்களது பார்வைக்கும் மதிப்பளியுங்கள்

உங்கள் பார்வை மட்டுமல்லாது, அவர்களது பார்வைக்கும் மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை எழும் என்பது போல தான். ஒருவர் மட்டும் விரும்பி உடலுறவில் ஈடுபடுவது இருவருக்குமே நிறைவை தராது.

புணர்தல்

உச்சம் ஏற்படாமல் புணர்தலில் ஈடுபடும் போது கண்டிப்பாக பெண்கள் வலியாக தான் உணர்வார்கள். எனவே, முதலில் அவர்கள் உச்சம் அடைய என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்.

கொஞ்சுதல்

ஆண்கள் பலரும் தவறு செய்யும் இடமே இது தான். பெண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்க வேண்டும் எனில், கொஞ்சி விளையாடிதலில் ஈடுபட வேண்டும். அப்போது தான் அவர்கள் உச்சம் அடைய முடியும்.

பேசுதல்

உடலுறவில் ஈடுபடும் முன்பு உங்கள் மனைவியுடன் பேச வேண்டியது அவசியம். பேசுவது, கொஞ்சுவது போன்றவை அவர்களை இன்பமடைய வைக்கும். எனவே, தவறாமல் உடலுறவில் ஈடுபடும் முன்னர் பேச மறக்க வேண்டாம். இல்லையேல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்பது போல ஆகிவிடும்.