Home பாலியல் உடலுறவில் ஈடுபட நாட்டம் குறைவதற்கான காரணங்கள்! !

உடலுறவில் ஈடுபட நாட்டம் குறைவதற்கான காரணங்கள்! !

32

abstaining-from-sex-to-improve-sex-lifeஆண்களுக்கு 60 வயது வரையிலும் கூட உடலுறவு மீதான நாட்டம் இருக்கும். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் நின்ற பிறகு உடலுறவில் பெரிதாக நாட்டம் இருக்காது. கணவனின் ஆசைக்காக மட்டுமே அவர்கள் இணங்க ஒத்துழைப்பார்கள்.மாதவிடாய் காரணம் மட்டுமின்றி, கணவரின் செயல்பாடுகள், உறவில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சிலவற்றின் காரணத்தினால் கூட பெண்கள் உடலுறவில் ஈடுபட விருப்பமின்றி போவார்கள். அவற்றை பற்றி
இனிக் காண்போம்…
இல்லறத்தில் ஏதேனும் பிரச்சனை அல்லது சண்டை, தனிப்பட்ட பாதிப்பு போன்ற காரணத்தினால் கணவன், மனைவி உறவிலேயே நாட்டம் குறைந்து போவது கூட காரணமாக இருக்கலாம்.
உடலுறவில் ஈடுபடும் போது மிகுதியான வலி ஏற்படும். இதன் காரணமாக மீண்டும் உடலுறவில் ஈடுபட தயக்கம் காட்டலாம்.

கணவன், மனைவி பந்தத்தில் இறுக்கம், இணக்கம் குறைந்து போனாலும் கூட உடலுறவில் ஈடுபட அவர் விரும்பாலம் போகலாம். சில சமயங்களில் நீங்கள் நீண்ட நாட்களில் அவருடன் இறுக்கமான உறவில் இல்லாதிருந்தாலும் கூட அவர்கள் இதில் நாட்டம் குறைந்து காணப்படலாம்.
வேலை அல்லது உடல் நலக் குறைபாடு காரணமாக அவர்கள் முற்றிலுமாக சோர்வாக இருந்தாலும் கூட உடலுறவில் ஈடுபட விரும்ப மாட்டார்கள்.
குறிப்பிட்ட வயதுக்கு பிறகு பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இயற்கையாகவே குறைந்து விடும். சலிப்பாக தான் எண்ணுவார்கள்.
உடலுறவில் ஈடுபட வேண்டுமெனில் உணர்ச்சி ரீதியாகவும், காதல் ரீதியாகவும் முதலில் இணைய வேண்டும். உணர்ச்சி ரீதியாக இன்றி உடல் ரீதியாக மட்டும் இனைய நினைக்கும் போது அவர்களுக்கு நாட்டம் குறைய ஆரம்பிக்கும்.