உடம்பில் உள்ள ரோமங்கள் சிறுவர்களில் இருந்து ஆண்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு விசயமாகும். உடலில் உள்ள ரோமங்கள் ஆண்மையின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது, ஆண்கள் பொதுவாக தங்களது உடல் ரோமங்கள் குறித்து பெருமையாகக் கருதுகிறார்கள். எனினும், உடல் ரோமங்கள் அகற்றும் கருத்து (மேன்ஸ்கேப்பிங் என அழைக்கப்படுகிறது) ஆண்களுக்கும் கூட பிடித்தமானதாக இருக்கிறது. மேலும் இது ஆண்களுக்கு ஒரு தடையாக இல்லை.விளையாட்டு வீரர்கள் மற்றும் பாடிபில்டர்கள் மட்டுமல்லாமல் பரவலாக பிற ஆண்களும் மெட்ரோசெக்சுவல் தோற்றத்தை விரும்புகின்றனர். நீங்கள் ரேஸர் எடுத்து மேன்ஸ்கேப்பிங்க் செய்து கொள்ள முடிவெடுக்கும் முன், உங்களுக்கான சில குறிப்புகளை இங்கு காண்போம்.
செய்ய வேண்டியவை
சரியான உபகரணங்களைப் பயன்படுத்துங்கள். நீங்கள் எப்போதாவது ஒரு முறை இதனைச் செய்வதாக இருந்தால், வழக்கமான முறையான ஷேவர் மற்றும் ரேஸர் பயன்படுத்தி செய்து கொள்வதே போதுமானதாகும். உங்களுக்கு மிக அதிக ரோமங்கள் இருந்து இதனை நீங்கள் அடிக்கடி செய்வதாக இருந்தால், நீளத்தை மாற்றிக்கொள்ளும் அமைப்புடன் கூடிய ஒரு எலெக்ட்ரிக் ட்ரிம்மரை வாங்குவது குறித்து யோசியுங்கள். வேக்சிங், இரசாயனம் பயன்படுத்தி உரித்தல் மற்றும் லேசர் ரோமம் அகற்றுதல் போன்ற மற்ற தேர்வுகள் சிக்கலானதாக இருக்கக்கூடும்.
ஷேவ் செய்வதற்கு முன்பு சருமத்தை மென்மையாக்குங்கள். வெதுவெதுப்பான நீரில் சுமார் 5 நிமிடங்களுக்கு உங்கள் சருமத்தை ஊறவைப்பது, சருமத்தை மென்மையாக்க உதவும். நீங்கள் ஷேவ் செய்யத் திட்டமிட்டிருக்கும் பகுதிகளில் ஒரு நல்ல ஷேவிங் கிரீம் அல்லது ஜெல் அல்லது மற்ற மிருதுவாக்கும் பொருட்களைப் பயன்படுத்தவும். அவற்றை தேவைக்கேற்ப தேய்த்துக் கொள்ளுங்கள். மென்மையான பொருட்கள் பயன்படுத்துவது, உங்களுக்கு குறைவான எரிச்சல் கொண்ட மற்றும் உள்வளர்ந்த ரோமங்களற்ற மென்மையான ஷேவ் கிடைப்பதற்கு உறுதியளிக்கும்.
உங்கள் ரேஸர் பிளேடுகளை முறையாக மாற்றவும். நீங்கள் ஒரு ஷேவர் மற்றும் ரேஸர் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் புதிய பிளேடு பயன்படுத்தவும். பிளேடுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது சருமத்தில் வடுக்களை உருவாக்கும் மற்றும் சரியில்லாத ஷேவ்களை ஏற்படுத்தும். மேலும் அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மயிர்க்கால்களில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நீங்கள் சுழலும் பிளேடுடன் கூடிய ஒரு எலெக்ட்ரிக் ரேஸரைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், மழுங்கியவைகளை ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுவதற்கேற்றபடி டிஸ்போசபில் ரேஸர்களை இருப்பு வைத்து, சிறப்பான ஷேவினைப் பெறுங்கள். அதே நேரத்தில் புதிய பிளேடுகளைப் பயன்படுத்துகையில் கவனமாக இருங்கள், ஏனெனில் அவை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தியதைக் காட்டிலும் கூர்மையானதாக இருக்கும்.
ரோமம் வளரும் திசையிலேயே ஷேவ் செய்ய வேண்டும். ஒரு கையடக்க ரேஸர் கொண்டு ஷேவ் செய்யும் போது, எப்போதும் ரோமம் வளரும் திசையிலேயே ஷேவ் செய்ய வேண்டும். ஷேவ் செய்யும் போது உங்கள் முகத்தை நீங்களே பார்த்துக்கொள்ளும் வகையில் கண்ணாடியைப் பயன்படுத்துங்கள், பின்னர் ரேஸரை ரோம வளர்ச்சிக்கேற்றபடி அதன் அடிப்பகுதியில் இருந்து நுனிவரை நகர்த்தி ஷேவ் செய்யுங்கள். ரோம வளர்ச்சிக்கு எதிர்திசையில் ஷேவ் செய்யாதீர்கள், அது நுனியை மட்டும் ஷேவ் செய்யக் காரணமாகிவிடும், கூர்மையான ரோமங்கள் சருமத்தில் மீதமிருக்கும் (வளர்ச்சியற்ற ரோமம்).
முதுகு மற்றும் தோள்களில் ட்ரிம்மிங் செய்து கொள்ளவும். மார்பில் ரோமங்கள் இருந்தால் பெண்கள் உற்சாகமடையக்கூடும் என்ற போதிலும், முதுகு மற்றும் தோள்களில் அதீத ரோமங்கள் இருப்பது பெரும்பாலான பெண்களுக்கு கவர்ச்சியாகத் தோன்றுவதில்லை.
உங்களது அக்குள்களில் உள்ள ரோமங்களை ட்ரிம் செய்யவும். புதர் போன்று அக்குளில் ரோமங்கள் இருப்பதால் பல பெண்களுக்கு உற்சாகம் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த இடத்தில் வியர்வையை ஏற்படுத்தி அக்குளில் துர்நாற்றம் ஏற்பட வழிவகுக்கும்.
செய்யக்கூடாதவை
வேக்சிங் அல்லது ஸ்பிரேக்களை வீட்டில் முயற்சித்தல் வேக்சிங் மற்றும் ஸ்ப்ரேக்கள் பயன்படுத்தி வீட்டில் ரோமம் அகற்றுதல் சிக்கலானது, அதிக நேரம் எடுக்கக் கூடியது மற்றும் வலி மிகுந்ததாகும். நீங்கள் அதனைச் சரியாகச் செய்யவில்லை என்றால், உங்களுக்கு தடிப்புகள், புடைப்புகள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டுவிடக்கூடும்.
முற்றிலும் ரோமங்களை அகற்றுதல். தொழில்முறை நோக்கங்களுக்காக முற்றிலும் ரோமங்கள் அகற்றத் தேவைப்படும் பாடிபில்டர்கள், நீச்சல் வீரர்கள் மற்றும் மாடல்கள் தவிர்த்து, மற்ற ஆண்கள் முற்றிலும் ரோமங்களை அகற்றி தங்களுக்கு ஷேவ் செய்துகொள்ளத் தேவையில்லை.
வெற்றுடம்புடன் இருத்தல். இந்த முழு உடல் ஷேவிங்கைப் பராமரிப்பது கடினமாக இருக்கும். மேலும் சில ஆண்களுக்கு சிறிது உடல் ரோமங்கள் மற்றும் சுத்தமாக ஷேவ் செய்த அக்குள்கள் அல்லது கால்கள் அசாதாரணமாகவோ மற்றும் பார்க்க இயலாத வகையிலோ (ரோமங்கள் மீண்டும் வளரும்பொழுது முரட்டுத்தனமான இணைப்புகள் தோன்றக்கூடும்) இருக்க வாய்ப்புண்டு.
உங்கள் அக்குள்களை ஷேவ் செய்தல். முழுமையாக ஷேவ் செய்த அக்குள்கள் ஆண்களுக்கு நல்ல தோற்றத்தைத் தராமல் இருக்கலாம். நீங்கள் முழுமையாக ரோமங்களை அகற்ற வேண்டிய தேவையிருக்கும் விளையாட்டை விளையாடுவதாக இருந்தாலோ அல்லது உங்களது அக்குள்களைக் கேமராவில் பதிவு செய்யும் வகையிலான காட்சி ஊடகத் தொழிலில் பணியாற்றுவதாக இருந்தாலோ ஒழிய, நீங்கள் அக்குள்களில் ரோமங்களை முழுமையாக அகற்றத் தேவையில்லை. அதற்கு பதிலாக நீங்கள் அதனை ட்ரிம் செய்து கொள்ளலாம்.
முதுகுப்புறத்தைப் புறக்கணித்தல். பெரும்பாலான ஆண்களுக்கு முதுகுப்புறம் ரோமங்கள் இருக்கும். நீங்கள் உடலின் மற்ற பகுதிகளை ஷேவ் அல்லது ட்ரிம் செய்து ஒழுங்குபடுத்திவிட்டு, முதுகுப்புற ரோமங்களை அப்படியேவிட்டால், நீங்கள் பார்ப்பதற்கு விசித்திரமாகத் தோன்றலாம்.
உங்கள் அந்தரங்க உறுப்பு ரோமங்களை ஷேவ் செய்தல். அந்தரங்க உறுப்புக்களில் ஷேவ் செய்து ரோமங்கள் இல்லாமல் இருப்பது பெண்களுக்கு கவர்ச்சியாகத் தோன்றக்கூடும், ஆனால் ஆண்களுக்கு, அதுவே சிறுவனைபோல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடலாம். அதற்கு பதிலாக ட்ரிம் செய்து கொள்ளலாம்; அது உங்கள் பிறப்புறுப்பு நீண்டு இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரலாம்.
ஒரு எல்லை விடுதல். உடலின் ஒரு பகுதியை நீங்கள் ஷேவ் செய்யும் போது மென்மையான சருமம் மற்றும் ரோமங்கள் கொண்ட சருமத்திற்கு இடையே நன்கு தெரியும்படியாக கோடு போல் நீங்கள் ஷேவ் செய்யாமல் விட்டுவிட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் ரோமத்தை ட்ரிம் செய்வதாக இருந்தால், நீங்கள் இதனைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லாமல் இருக்கலாம்.
வடிவங்களை ஷேவ் செய்தல். மிகவும் கலைத்திறனுடன் மற்றும் உங்கள் உடலில் வடிவமைப்புகளுடன் ஷேவ் செய்ய முயற்சி செய்யாதீர்கள். கீழ்நோக்கி சுட்டிக்காட்டும் அம்புக்குறி அல்லது செதுக்கப்பட்ட இதயம் போன்ற தோற்றம் பலரையும் கவர்வதில்லை.
உடல் ரோமத்தை பின்னிக்கொள்ளுதல். உங்கள் உடல் ரோமம் அல்லது அந்தரங்க உறுப்பு ரோமங்களை பின்னிக்கொள்ளாதீர்கள். உங்கள் உடலில் அல்லது அந்தரங்க உறுப்பில் ரோமப்பின்னல்களைப் பார்க்க யாருக்கும் விருப்பம் இருப்பதில்லை.
மேன்ஸ்கேப்பிங் ஒரு எளிய செயல்முறையாக இருக்க முடியும் மற்றும் ஒரு எளிய பியர்ட் ட்ரிம்மர் பயன்படுத்துவது மற்றும் இந்த குறிப்புகளைப் பின்பற்றுவது, நீங்கள் ஒரு ஆரோக்கியமான வழியில் மெட்ரோசெக்சுவல் தோற்றத்தைப் பெற உதவியாக இருக்கும்.