Home ஆண்கள் உங்கள் கணவர் ஆண்மை குறைபாடு உடையவரென நீங்கள் கவலைப்படுகிறீர்களா?

உங்கள் கணவர் ஆண்மை குறைபாடு உடையவரென நீங்கள் கவலைப்படுகிறீர்களா?

24

588267028150612111148_female_viagra2-400x225நமது சமீப கால உணவுமுறை மாற்றங்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் சில மின்சார உபகரணங்களின் கதிரியக்க தாக்கத்தினாலும் ஆண்களுக்கு ஏற்படும் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது மலட்டுத்தன்மை என கூறப்படும் ஆண்மைக் குறைவு.

உடல் பருமனால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுவதற்கானக் காரணங்கள்!!

மது, புகை, போதை பொருள் பழக்கம் சீரான இரத்த ஓட்டம் இல்லாதது என பல காரணங்களால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்று நாம் காரணங்களை அறிந்து வைத்திருக்கிறோமே தவிர, அதை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பெரும்பாலும் யாரும் அறிந்திருப்பது கிடையாது.

கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவுக் கொள்ள வேண்டிய நாட்கள்!!

ஒரு வருடத்திற்கும் மேல் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொண்டும், கருத்தரிக்க முடியவில்லை என்றால், மலட்டுத்தன்மை இருக்கிறது என்று அர்த்தம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறான நிலை உங்களுக்கு இருக்கிறது எனில், அதை எப்படி கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம் என நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

அடிப்படை சிகிச்சை முறைகள் இரத்த எண்ணிக்கை கண்டறிவது, இரத்த சர்க்கரை, வைட்டமின் பி12, வைட்டமின் டி 3, இரத்த சிவப்பணுபடியும் அலகு வீதம் (Erythrocyte Sedimentation Rate), ஹெபடைடிஸ் (Hepatitis), மேகப் புண் (Syphilis) போன்றவை குறித்து பரிசோதனை செய்து ஆண்மை குறைவு பற்றி கண்டறியப்படும்.

விந்து பகுப்பாய்வு (Sperm Analytics) 1.5 – 5.5 மி.லி விந்தணுவை எடுத்து, விந்தின் எண்ணிக்கை மற்றும் அந்த தரத்தை பரிசோதனை செய்வார்கள்.

விந்தணு எண்ணிக்கை
ஒரு மில்லி விந்தில், விந்தணு எண்ணிக்கை 20 மில்லியனுக்கு குறைவாக இருந்தால் மலட்டுத்தன்மை இருப்பதாக கண்டரியபப்டும்.

விந்தணுவின் வேகம் குறித்த தரம் வெளிப்படம் விந்தில் குறைந்தது 50% விந்தணுக்களாவது வேகமாக செல்லும் திறன் கொண்டிருக்க வேண்டும். மற்றும் பரிசோதனையில் விந்தனுக்குள் விரைவாக திறனிழந்து போவதை கண்டறிந்தால் ஆண்மை குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்று அறியப்படும்.

விந்தணு உருவவியலில் (Sperm morphology)
விந்தணுவின் உருவம் மற்றும் அதன் தலை பகுதியின் அளவு குறித்து பரிசோதனை செய்யப்படும். வெளிப்படும் விந்தணுக்களில் 14% ஆவது இயல்பான தலை அளவை கொண்டிருக்க வேண்டும். மற்றும் மருத்துவ முறையில் விந்து pH 7.2 – 7.8 இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

விந்தணு பண்பு (Semen Culture) விந்தணு திரவத்தில் மாசு அல்லது தீங்கு ஏற்படுத்தும் நோய் கிருமிகள் இருக்கிறதா என கண்டறியப்படும். ஒரு வேலை விந்தில் பாக்டீரியாக்கள் தாக்கம் இருந்தால் அதை சரி செய்ய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். சிறுநீர் பாதை நோய் தொற்று காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம்.

டெஸ்டோஸ்டிரோன்
ஆண்களின் இனப்பெருக்க ஹார்மோனில் முக்கியமான பங்கு வகிப்பது டெஸ்டோஸ்டிரோன். இது விந்தகங்களில் மற்றும் புரோஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, இந்த டெஸ்டோஸ்டிரோனை பரிசோதனை செய்து, அதன் திறன் எவ்வாறு உள்ளது என கண்டறியப்படும். ஒருவேளை டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். பின் அதற்கு ஏற்ப உணவுக் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைகள் மேற்கொண்டால் எளிதாக குணமடைந்துவிடலாம்.