உங்கள் துணையிடம் இருந்து கிடைக்கும் முழுமையான முதல் முத்தம். எந்த கட்டாயமும் இன்றி, முழு காதலோடு, அச்சமின்றி, தயக்கமின்றி தரப்படும் அந்த முத்தம் எதற்கும் ஈடாகாது.
திருமணம் முடிந்து இருவரும் ஒன்றாக உறங்கி எழும் அந்த முதல் விடியல் மிகவும் சிறப்பானது ஆகும். உடலுறவு என்பது இரண்டாம் பட்சம் தான். உங்களுக்கு பிடித்தமான நபர், உங்களோடு வாழ்க்கை முழுதும் பயணிக்க போகும் அந்த நபரோடு நீங்கள் எழும் அந்த காலை பொழுது எந்நாளும் நினைவை விட்டு அகலாது.
கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தாலும் கூட, ஏதோ ஓர் நிகழ்வு அல்லது சம்பவம் உங்கள் இருவரையும் காதலை உணர வைக்கும். அந்த முதல் நிகழ்வு மிகவும் உன்னதமானது.
இருவரை பற்றியும், இருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் இரவு முழுக்க பேசி கழிக்கும் அந்த முதல் முறை மிகவும் இனிமையானதாக இருக்கும். ஏனெனில், முதல் முறை நீங்கள் இருவரும் நிறைய பேசி இருப்பீர்கள், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்திருப்பீர்கள்.
முதல் முறை ஒருவருக்கு ஒருவர் “ஐ லவ் யூ” சொல்லிக் கொள்ளும் அந்த தருணம், நாள் நினைவை விட்டு அவ்வளவு எளிதில் மறைந்திடாது. மெல்லிய குரலில், நெருக்கமான பொழுதில் காதலை பரிமாறிக்கொள்ளும் அந்த தருணம் தரும் மகிழ்ச்சி இன்றியமையாத ஒன்று.
அந்த தருணம், நாள் நினைவை விட்டு அவ்வளவு எளிதில் மறைந்திடாது. மெல்லிய குரலில், நெருக்கமான பொழுதில் காதலை பரிமாறிக்கொள்ளும் அந்த தருணம் தரும் மகிழ்ச்சி இன்றியமையாத ஒன்று.
முதல் முறை எங்காவது நிகழ்ச்சிக்கு செல்லும் போது அவசர வேலையில் உங்கள் துணைக்கு நீங்கள் உடை மாற்ற உதவும் அந்த முதல் தருணம் யாராலும் மறக்க முடியாது.
முதல் முறை என்றாவது இருவருக்கும் விடுமுறை நாளாக இருக்கும் போது சேர்ந்து சமைக்க முற்படுவது. சமையல் ருசியாக இருக்குமோ, இல்லையோ அந்த நிகழ்வு மிகவும் ருசிகரமாக அமையும்.
உங்கள் துணை மீது வேறொருவர் அதிக உரிமை எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் அந்த முதல் பொறாமை அளவில்லாத பாசத்தின் வெளிப்பாடு.