Home சூடான செய்திகள் உங்கள் உடலை அறிந்து ஆடை அணியுங்கள்..!!

உங்கள் உடலை அறிந்து ஆடை அணியுங்கள்..!!

77

சேலையை சென்ற தலைமுறை வரை எல்லா பெண்களுமே அணிந்திருந்தார்கள். ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாகவே மாறிவிட்டது. சேலைக்கு இணையான கவர்ச்சியான ஆடை எதுவுமில்லை என்றபோதிலும்கூட!

சேலை இந்திய கலாச்சாரத்தின் ஒரு குறியீடு. அதை தொலைப்பது இந்திய தேசத்தையே தொலைப்பது போல என்பதை நம்நாட்டு பெண்கள் உணர வேண்டும்.

சிலர் சேலையை அணியும்போது பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோணும். இன்னும் சிலர் அணியும்போது குமட்டுவதுபோலவும் தோணும். உதாரணமாக 20 – 35 வயது வரை உள்ள பெண்கள் (அதிகபட்சம் 40 வயது என்றூகூட வைத்துக்கொள்ளலாம்) தொப்புள் குழி பட்டும்படாமல் உடுத்தியிருந்தால் அது பார்ப்பதற்கு கொள்ளையழகு. எப்படிப்பட்ட ஆணையும் வசீகரிக்கவே செய்யும்.

50 வயதைக்கடந்தவர்கள்கூட, அதுவும் பெரும் தொப்பையுடம்பை வைத்துக்கொண்டு தங்களது வயதை குறைத்துக் காண்பிப்பதற்காக தங்களது அகலமான தொப்புளை வெளிச்சம்போட்டு காண்பிக்கும்போது அருவருப்பாக தெரியும்.

”லோ ஹிப்” சேலையணிந்து ”ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்”டுடன் ஒரு பெண் அலுவலகத்துக்கோ பொதுவிலோ நடமாடும்போது எல்லோருடைய கவனத்தையும் அப்பெண் ஈர்த்துவிடுவாள் என்பது உண்மையே. ஆனால் அப்படி உடையணிந்து வலம் வரும் பெண்ணை இன்றைக்கும் சமூகம் ஒருமாதிரியான பெண்ணாகவே பார்க்கிறது. என்பதையும் மறுப்பதற்கில்லை.

எதுவும் பட்டும்படாமல் தெரிந்தால் தான் அழகு. திறந்து காட்டிவிட்டால் – எல்லா அழகையும், கவர்ச்சியையும் திறந்து காட்டிவிட்டால் அதன் மவுஸு தானாகவே கீழிறங்கிவிடும் என்பது யதார்த்தம்.

எல்லாவற்றிர்க்கும் மேலாக உடல்வாகைப்பொருத்தே அவரவர் அணியும் ஆடை கவனத்தை ஈர்ர்க்கும். நல்ல கட்டுடலுடன் 38 30 40 அளவுள்ள ஒரு பெண் சேலையணியும்போது வானத்து தேவதைகள்கூட பொறாமைப்படுமளவுக்கு பேரழகியாக தோற்றம் தருவாள். அதேசமயம் ஒல்லியாக இருப்பவர்கள் தொப்புள் தெரிய ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் அழகுப்போட்டியில் கலந்து கொண்டாலும் பார்க்க சகிக்காது. எல்லாவற்றிர்க்கும் நல்ல தோற்றம் உடற்கட்டு அவசியம். உடற்கட்டு சேலைக்கு மிகவும் அவசியம். இல்லையெனில் தூணுக்கு துணி சுற்றிவிட்டது போலத்தான் இருக்கும்.

பழங்கால படத்தைப்பார்த்தால் தெரியும். பொதுவாக எல்லா நடிகைகளுமே சற்று பூசினாற் போன்ற உடல் வாகு உடையவர்களாகவே இருந்தாலும் சரோஜாதேவிக்கும் வாணிஸ்ரீக்கும் சேலை கணக்கச்சிதமாக பொருந்தி வந்தார்ப்போல் மற்ற நடிகைகளுக்கு பொருந்தவில்லை என்பதை காணலாம். அதற்காக மற்ற நடிகைகளுக்கு சேலை அழகில்லை என்று சொல்வதாக அர்த்தமல்ல. பெரும்பாலும் பழங்கால நடிகைகள் எல்லோருக்குமே சேலை அழகாக பொருந்தியிருந்தது என்பதும் உண்மையே.

தற்சமயம் அழகுப்போட்டியில் கலந்துகொள்ளும் சிலரைப்பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்டவர்களைப்போலவே தோற்றமளிக்கிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் ஒல்லியாக இருப்பது அழகு என்று இக்காலப் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவ்வப்போது நடக்கும் அழகுப்போட்டியில் காற்றடித்தால் பறந்துவிடுமளவுக்குள்ள சிலரை பார்க்கும்போது பரிதாபமே மிஞ்சுகிறது. எங்கே நடப்பதற்குக்கூட தெம்பில்லாமல் கீழே விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சுமளவுக்கு!

இந்திய ஆண்கள் அதிலும் குறிப்பாக தமிழக ஆண்கள் கண்ணோட்டத்தில் அழகான பெண் என்றால் குறைந்தது 38 30 40 சைஸில் இருந்தால்தான் பெண்கள் அழகு. 40 32 42 ஐ கூட அழகியாக ஏற்றுக்கொள்வார்களே தவிர 27 28 36 ஐ எல்லாம் அழகியாக ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். அதனால்தான் குஷ்பூ போன்றவர்கள்கூட எல்லோராலும் விரும்பப்படுகிறார்கள். பொதுவாகவே தமிழ்நாட்டு ஆண்களுக்கு அழகான பெண் என்றால் ஓரளவுக்கு கொழு கொழுன்னு இருக்கணும். எலும்பும் தோலுமாக இருப்பவர்கள் நோயாளிகள் எனும் லிஸ்டை சேர்ந்தவர்களாகவே இங்கு கணிக்கப்படுகிறார்கள். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

சீசனுக்கு ஏற்ற டிரஸ் போடுங்க! நீங்க அழகு ராணிதான்!

கந்தையானாலும் கசக்கி கட்டு என்பார்கள். சாதாரண காட்டன் உடை என்றாலும் அதை நன்றாக அணிந்தாலே போதும் அசத்தலாய் இருக்கும் . ஆனால் சில பெண்கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போது எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும் அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் உடைகளாக இருந்தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப் பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.

ஆடை அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் நீங்களும் அழகு ராணிதான்.

ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்தவரை இரண்டு சீசன்களாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை இன்னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த காலம் வரையிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம் வரைக்கும் பொருந்துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்.

கோடைக்கேற்ற ஆடை

கோடை சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்டனில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம். பிரைட் கலர்களில் பெரிய பிரின்ட் போட்ட டிசைன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காஞ்சி காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க் காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி சுடிதார், சல்வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ளலாம்.

வியர்க்காத ஆடைகள்

ஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக்கும்.
வெயில் காலங்களில் கல்யாண வீடுகளுக்கு, பார்ட்டிகளுக்கு போகும்போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப் புடவையை விட அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

உடல் பருமனானவர்கள்

பெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.
பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள். பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.

உயரமாக ஒல்லியாக உள்ளவர்கள்

ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. சிறிய பார்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம். சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் பாட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம்.

கறுப்பு அல்லது மாநிறப் பெண்கள்

கடும் நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூடாது. அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறிமாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ அணியவேண்டும்.

கறுப்பாக இருப்பவர்கள் கடும் நிறத்தில் உள்ள சேலைகளை அணிய வேண்டாம் கருப்பாக, குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய ஜரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ சேலை அணியலாம். பெரும்பாலும் பார்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். அப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும்.

சிவப்பு நிறப் பெண்ணா

சிவந்த நிறம் உடையவர்கள் பிளேனாக டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம்.

சீசனுக்கு ஏற்ற உடைகள்

பெண்கள் துணிகளை வாங்கச் செல்லும்போது அது சீசனுக்கு ஏற்ற உடையா என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை விற்கும் போது சீசனுக்கு பொருத்தமில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறோம். எனவே ஆடை அலங்கார நிபுணர்கள் கூறியுள்ள இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத்திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம்