Home ஆரோக்கியம் நீரிழிவு உங்களுக்கு நீரிழிவா? குறைந்த கலோரி உணவு சாப்பிடுங்க!

உங்களுக்கு நீரிழிவா? குறைந்த கலோரி உணவு சாப்பிடுங்க!

38

நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டால் நான்கு மாதங்களில் அவர்களுக்கு நீரிழிவு கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு என்பது உலகளாவிய ஒரு நோயாக பரவியுள்ளது. நீரிழிவின் தொடர்ச்சியாக கண் பாதிப்பு, நரம்பியல் நோய்கள், மூட்டுவலி போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிய தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளனர்.

டைப் 2 நீரிழிவு நோய்

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். மாத்திரை மூலம் குணமாக்குவதை விட எளிதில் நோயை குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவர்கள் குறைந்த கலோரி தரும் உணவு வகைகளை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய் குணமாகி விடும்.

இன்சுலின் சுரப்பு குறையும்

இந்த உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது குறையும். இதன் மூலம் இருதயத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். என்றும் ஆய்வாளர்க கூறியுள்ளனர். குறைந்த சக்தி (கலோரி) தரும் உணவு வகைகள். தர்பூசணி, ஓட்ஸ், குகும்பர், முட்டைகோஸ், ஆப்பிள், காரட், பீன்ஸ் போன்றவையாகும். இவற்றை தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். இதன்மூலம் இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.