Home ஆரோக்கியம் உங்களின் அதிக எடையை கீழே குறிபிட்டுள்ள 3 வழிகளில் தெரிந்து கொள்ளலாம்

உங்களின் அதிக எடையை கீழே குறிபிட்டுள்ள 3 வழிகளில் தெரிந்து கொள்ளலாம்

28

உடல் பருமன் பரிசோதனை:
நீங்கள் மிகவும் பருமனா அல்லது சரியான‌ எடை உடைய‌வரா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதை பரிசோதித்து பார்க்க சில சோதனைகள் உள்ளன.
ஹைட்ரோஸ்டடிக் உடல் கொழுப்புப் பரிசோதனை:
ஹைட்ரோஸ்டடிக் சோதனையால் உடலின் கொழுப்பு சதவீதத்தை தீர்மானிக்கலாம் மற்றும் இது மிகவும் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. இந்த சோதனையால், ஒருவரை தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் வைத்து அவரது உடல் எடை தண்ணீரில் இருந்த படியே கணக்கிடப்படும்.
இரட்டை ஆற்றல் ஊடுகதிர் அப்சார்ப்ஷியோமெட்ரி:
இந்த கருவி உடல் பருமனை துல்லியமாக சரிபார்க்க உதவுகிறது, இதில் ஒருவரை சமமான நிலையில் 30 நிமிடங்கள் சீ டி ஸ்கேனரில் படுக்க வைத்து அதன் பிறகு முழு உடல் எக்ஸ்ரே எடுக்கப்படும்.
மற்றும் சில முறைகள்:
மேலே குறிப்பிட்டுள்ள முறைகள் விசித்திரமாக இருந்தாலும், அவை ஏறத்தாழ சரியாக கணக்கிடபடுகிறது. மிகவும் எளிய‌ முறையான காலிபர்கள், பி.ஐ.ஏ, அல்லது உயிர்மின் மின்மறுப்பு பகுப்பாய்வு, உயரம் / எடை வரைபடங்கள் மற்றும் ஒருவரின் எடையை தீர்மானிக்க மிகவும் பொதுவான மற்றும் எளிதான வழிகளில் ஒன்றாகும் இறுதியாக, மிகவும் பிரபலமான பிஎம்ஐ (உடல் நிறை குறியீட்டெண்) சோதனை, போன்ற எளிதான முறைகள் உள்ளன. நீங்கள் ஒரு பொருத்தமான முறையை தேர்வு செய்து நீங்கள் அதிக‌ எடையா அல்லது உடல்பருமனா என்று சந்தேகம் இல்லாமல், தீர்மானிக்க முடியும்.
உடல் எடையை எப்பொழுதும் சீராக வைத்துக்கொள்ள ஒரு மிகவும் சிறந்த வழி ஒன்று உள்ளது, ஆனால் அது ஒருவருடைய‌ முயற்சி மற்றும் விடாமுயற்சியில் உள்ளது. எளிய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான உடல் பராமரிப்பு போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேன்டும், உடற்பயிற்சி, மற்றும் துரித உணவு பொருட்களை தவிர்த்து ஆரோக்கியமான மன நிலையுடன் இருந்தால் வாழ்க்கையை நல்ல‌ உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
ஒரு சமீபத்திய ஆராய்ச்சியின்படி, மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக, உயர் இரத்த‌ அழுத்த அளவுகள் ஒருவரின் தொப்பை அதிகரிக்க வழிவகுக்கும். பல நிபுணர்களின் கருத்துப்படி ஒருவரின் தொப்பையை குறைப்பது மிகவும் சவாலான காரியமாகும். நீங்கள் எடையை குறைக்க வேண்டும் என்றால் உணவு முறையில் மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் கட்டாயமனது. குறைந்தது நாற்பது நிமிடங்கள், ஒரு நாள் அல்லது வாரத்திற்கு ஐந்து நாட்கள் உடற்பயிற்சி மேர்க்கொள்ள‌ வேண்டும்.
நீங்கள் உடல் பருமனை கன்டு அஞ்ச வேண்டாம், அதற்கு மாறாக மேலே குறிபிட்டுள்ளவற்றை பின்பற்றினால் நீங்கள் விரைவில் எடையை குறைக்க முடியும்.
நீங்கள் பருமனா அல்லது அதிக எடை உடையவரா என்று தெரிந்து கொள்ள வேறு வழி முறைகளை சேர்க்க வேண்டுமானால் கீழே உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்