tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,kelvi,sex kelvi.
உங்களது தம்பி எழுதுவது…
நான் எல்லாரையும் சிரிக்க வைப்பவன். ஆனால், இப்போது, மன தளவில் அழுதுகொண்டிருக்கிறேன். அக்கா, என் 32 வயதுவரை திருமணம் செய்யவில்லை. ஏனென்றால், திரும ணம் செய்தால், விதவையாகவோ அல் லது கணவனால் கைவிடப் பட்டவரை யோ தான் திருமணம் செய்ய வேண்டு ம் என்பது, என் லட்சியம்; அதுவும் நிறைவேறியது.
என் குடும்பத்தினர், ஜாதி பார்க்காமல், எளியமுறையில், எனக்கு திருமணம் செய்து வைத்தனர். என் மனைவி ஒரு பட்டதாரி ஆசிரியை. தனியார் பள்ளியி ல் வேலை பார்க்கிறாள். முதல் கண வரிடமி ருந்து விவாகரத்து வாங்கி விட்டாள். 12 வயதில் ஒரு பெண் குழந் தையும் இருக்கிறது. அவளை, என் மனைவியாகவும், அந்த குழந் தையை என் குழந்தையாகவும் ஏற்றுக் கொண்டேன்.
அவளது வயது மற்றும் ஜாதகம், பள்ளிக்கூட சான்றிதழ் எதையும் இதுவரை பார்க்கவில்லை; அவளும் காட்ட வில்லை. நானும் ஒர் பட்டதாரி. என் குடும்பத்தினர், என் ஊர், என் பழக்கவழக்கங்கள், நான் செய்யும் தொழில் எல்லாவற்றையும் முன்னரே சொல்லி, அவ ர்களது வீட்டில் இருந்து என் வீட்டையும், என் கிராமத்தையும், என் சகோதரிகள் வீட்டையும் பார்த்துதான், அவள் வீட்டார், திருமணத்தி ற்கு நாள் குறித்தனர்.
திருமணம் முடிந்த நாளில் இருந்து, இன்று வரை, என்னால் நிம்ம தியாக வாழ முடியவில்லை. அவளின் முதல் கணவர் நல்ல அழகு; வசதியானவர்; இவள்மீது அன்புமழை பொழிவாராம். இவளது மாமி யார் தான், இவர்களது விவாகரத்துக்கு காரணமாம்; இதையே தின மும் இரவில் என்னிடம் கூறுவாள்.
அவர் தாடி வைத்திருப்பாராம். அதுபோல் நானும் தாடி வைக்க வே ண்டும் என்கிறாள். அப்போது, என் மனநிலை எப்படி இருக்கும் என் று நினைத்துப் பாருங்கள். நான் அமைதியாக இருந்து விடுவேன்.
என் அமைதியை, அவள் தவறாக புரிந்துகொண்டு, அவளது அழகு க்கு, நான் அடிமையாகி விட்டேன் என்று நினைக்கிறாள். இது, புய லுக்குமுன் வரும் அமைதி என்று அவளுக்கு தெரியவில்லை. முத ல் இரவில், என் மனைவி சொல்லிய வார்த்தை, இன்னும், என் மன தில் தீயாக எரிந்து கொண்டிருக்கிறது.
என் திருமணத்திற்கு, என் சகோதரிகள் தாலி செய்தனர். அது இயல் புதானே. எங்களது திருமண நாள் அன்று இரவு, என் குடும்பத்தினர் பற்றி பேச்சு வந்தது. “உங்கள் சகோதரிகள் நம் திருமணத்திற்கு என்ன செய்தனர்?’ என்றாள்.
நானோ, “அவர்கள் தாலி செய்வதுதான் முறை’ என்றேன். உடனே அவள், “அந்த தாலியை கழற்றி தருகிறேன். அவர்களிடமே கொடுத் து விடு…’ என்றாளே பார்க்கலாம்! அப்போது, என் மனநிலை எப்படி இருந்திருக்கும். அவள் வீட்டிலிருந்து, ஒரு துளிகூட வரதட்சணை யோ, வேறு எந்த பொருளும், நானும், என் குடும்பத்தினரும் கேட்க வும் இல்லை, அதைப்பற்றி நினைக்கவும் இல்லை.
எங்களது குடும்பம் ஓரளவு வசதியானது தான். திருமணம் முடிந்த வுடன், மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வது, தமிழ் பண்பாடுகளில் ஒன் று. ஆனால், எனக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதம் ஆகியும் என் ஊருக்கு போகவில்லை. கால் ஆண்டு தேர்வு விடுமுறையில் செல்லலாம் என்று சொன்னாள், பின், அரையாண்டு தேர்வுக்கு போ கலாம் என்று சொன்னவள், இப்போதோ, “உங்கள் ஊர் ஓர் கிராமம். என்னால் வர முடியாது. நான் கான்வென்ட்டில் படித்தவள். எனக்கு உரிய வசதிகளை, உங்கள் ஊரில் ஏற்படுத்தி தாருங்கள், வருகிறே ன்…’ என்கிறாள்.
அவள் கேட்கும் வசதிகளை எல்லாம், உடனே செய்ய முடியாது என்று கூறினால், “என்னை பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் பெண் கேட்டனர். உங்களை விட அழகான, நன்றாக படித்து, அரசா ங்க வேலையில் உள்ளவர்கள் எல்லாம், என்னை திருமணம் செய் ய தயாராக இருந்தனர். அவர்களை எல்லாம், வேண்டாம் என்று கூறிவிட்டு, உங்களைத் திருமணம், செய்திருக்கிறேன். அது நீங்கள் செய்த புண்ணியம்’ என்கிறாள்.
அவள் இன்னும் முதல் கணவனுடனே வாழ்வதாக, எல்லாரிடம், கூறிக் கொண்டிருக் கிறாள். அவள் வேலை செய்யும் பள்ளியில் கூட அதையேதான் சொல்லியிருக்கிறாள். அவளுக்கு தேவை ஒரு ஆண். ஆனால், இன்னும், மனதில் முதல் கணவனையே நினைத் துக் கொண்டிருக்கிறாள் என்பது, அவளது பேச்சிலேயே தெரிகிறது.
இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்பதை, நீங்கள்தான் கூற வேண்டும்!
அன்புடன்
தம்பி.
அன்பு தம்பிக்கு—
உங்கள் கடிதம் கிடைத்தது. திருமணம் செய்தால், ஒரு விதவையை யோ அல்லது கணவரால் கைவிடப்பட்டவளையோத்தான் மணம் முடிப்பது என்கிற, உங்களது லட்சியம் உயர்ந்தது தான். அதை நான் பாராட்டுகிறேன். அதே சமயத்தில், உங்களின் மேலான லட்சியம், தகுதியான இடத்துக்குபோய் சேருகிறதா என்பதைப்பார்க்க வேண் டாமா?
“பாத்திரமறிந்து பிச்சையிடு, கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு…’ என்றனர்.
நீங்கள் கோத்திரம் பார்த்திருக்க வேண்டாம். ஜாதி, மதம், வயது, எதுவும் பார்த்திருக்க வேண்டாம். இந்தப் பெண்ணை மணப்பது – அவளுக்கு எந்த வகையிலாவது உதவுமா என்று பார்த்திருக்க வே ண்டும். உங்களது லட்சியம் உண்மையானதாக இருந்திருந்தால், ஏழை விதவைப் பெண்ணை மணந்திருக்க வேண்டும் அல்லது கணவரால் நிராகரிக்கப்பட்ட, ஊனமுற்ற பெண்ணை மணந்திருக்க வேண்டும்.
அதைவிட்டு, கேப்பைக் கூழ்தான் குடிக்கிறேன் என்று சொல்லி, நெய்யில் முந்திரி பருப்பை வறுத்துப் போட்ட கேழ்வரகு பாயசத் துக்கு, போய் உட்கார்ந்திருக்க கூடாது.
உங்களை விடவும் படித்தவள்; பழைய கணவன் நினைவில் இருப்ப வள்; உங்கள் குடும்பத்தை விட வசதியான குடும்பம்; செழிப்பான, நாகரிகமான பிறந்த வீடு…
இப்படிப்பட்டவளுக்கு, உங்களது லட்சியத்தை, தானமளித்து வீணா க்கி விட்டீர்கள். இதை விடவும், கல்யாணம் செய்து தர வசதியில் லாத, ஏழை வீட்டு முதிர் கன்னியை நீங்கள், உங்கள் செலவில் மண ந்திருக்கலாம். உங்களது திருமணத்தில் புரட்சி இல்லை; வெறும் பிசினஸ்தான் இருக்கிறது. முடிந்தால் சகித்துக் கொள்ளுங்கள்; முடியாவிட்டால், விலகி வந்து விடுங்கள். வெறும் வீம்புக்காக, பொதி சுமக்க வேண்டாம்.