Home ஆரோக்கியம் ஈறுகளில் ரத்தம் வடிகிறதா?… இத செய்ங்க அந்த பிரச்னையே இருக்காது…

ஈறுகளில் ரத்தம் வடிகிறதா?… இத செய்ங்க அந்த பிரச்னையே இருக்காது…

41

பற்களைப் பாதுகாப்பதில் அழகு, ஆரோக்கியம் இரண்டு சேர்ந்தே இருக்கிறது. பற்கள் மற்றும் ஈறுகளில் பாக்டீரியா தொற்றுகள் உண்டாவதால் தினமும் பல் துலக்கும் போது, பற்களின் இடுக்குகளிலும் ஈறுகளிலும் ரத்தம் கசிகிறது. இந்த பிரச்னைக்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களின் மூலம் எளிதாகத் தீர்வு காண முடியும்.

மாதுளை பாக்டீரியாக்களால் உண்டாகும் நச்சுத் தன்மையையும் அழிக்கும். அதனால் தினமும் 30 மில்லி அளவு மாதுளை ஜூஸை எடுத்து வாய் கொப்பளித்தால், மிக விரைவிலேயே ஈறுகளில் ரத்தம் வடிவதைத் தடுக்க முடியும். இந்த மாதுளை சாறில் சர்க்கரை எதுவும் சேர்க்கக்கூடாது.

ஆயில் புல்லிங் மிகச் சிறந்த ஆயுர்வேத முறை. ஆயில் புல்லிங் செய்வது இதயத்துக்கு மட்டுமல்லாது, பற்களையும் உறுதியாக்குகிறது. ஆயில் புல்லிங் செய்வதற்குப் பெரும்பாலும் நல்லெண்ணெய் பயன்படுத்தப்டுகிறது. ஆனால் நல்லெண்ணெயை விட தேங்காய் எண்ணெய் சிறந்த பலன்களைத் தரும்.

கற்றாழை உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை கொண்டது. இது சருமம், தலைமுடி ஆகியவற்றுக்குப் பொலிவைத் தரக்கூடியது. கற்றாழையின் ஜூஸையும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து வாய் கொப்பளிக்கப் பயன்படுத்தலாம்.

பற்களிலும் ஈறுகளிலும் இரவு தூங்கச் செல்லும் முன் சஜல துளிகள் தேனைத் தடவிக் கொண்டு, காலை எழுந்ததும் வாய் கொப்பளித்து வந்தால், ஈறுகளிலும் பற்களின் இடுக்குகிகளிலும் ரத்தம் கசிவது தவிர்க்கப்படும்.

உப்பு கலந்த வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு, அடிக்கடி வாய் கொப்பளித்து வருவது ஈறுகள் மற்றும் பற்கிள்ல ரத்தம் வடிவதற்கான நல்ல தீர்வாக அமையும்.