500 கிராம் கழுவிய நடுத்தர அளவு இறாலை கீழ் கொடுக்கப்பட்டுள்ளவைகளுடன் சேர்த்து சமைக்கவும்.
மிளகாய் வற்றல் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ண தேக்கரண்டி
புளி (கோக்கம்) 2 லிருந்து 3 சிறிய துண்டுகள்
தேங்காய் துண்டுகள் – ண கப்
வேக வைத்த இறாலை பக்கத்தில் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுத்து கடுகு போட்டு பொரித்து விடவும். பின்னர் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்ற சேர்த்து வறுக்கவும்.
பெரிய வெங்காயம் – 1 கப் (அல்லது 1 நறுக்கிய வெங்காயம்)
இஞ்சி – 2’’ (நறுக்கியது)
பூண்டு – 6 -8 பல்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் 2 லிருந்து 3 (நறுக்கியது)
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வேக வைத்த இறாலை சேர்த்து போதுமான நீர் ஊற்றவும் பின்னர் அதோடு ண தேக்கரண்டி வெந்தயப் பொடியைப் போட்டு நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து நீர் வற்றும் வரை வேக விடவும்.
பின்னர் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வேக விடவும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.