Home பெண்கள் அழகு குறிப்பு இரவு நேர‌ சரும பாதுகாப்பிற்கான 5 அழகு குறிப்புகள்

இரவு நேர‌ சரும பாதுகாப்பிற்கான 5 அழகு குறிப்புகள்

22

1. படுக்கைக்கு செல்லும் முன் மேக் அப்பை கண்டிப்பாக எடுக்கவும்
தினமும் தூங்க போகும் முன் மறக்காமல் உங்கள் மேக் அப்பைக ளைந்து விட்டு படுத்தால், அடுத்த நாள் உங்கள் சருமம் பாதுகாப்பக இருப்பதை நீங்களே உணர்வீர்கள், இப்படி தினமும் செய்வதால், தோலின் மிருதுதன்மை பாதுகாப்பாக இருக்கும். அனாவசியமான முக எரிச்சல், தோல் அடைப்பு இவற்றையும் தடுக்கலாம்.

2. படுக்கும் முன் தினமும் ஒரு டம்ளர் த்ண்ணீர் அருந்தவும்
தினமும் படுக்கும் முன் ஒரு டம்ளர் த்ண்ணீர் அருந்தினால், உங்கள் தோல் உலர்வதையும், மது அருந்தி இருந்தால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் சரி செய்யும்.1 க்ப் தண்ணீர் அருந்தினால் நிச்சயமாக பல நல்ல பலன்களை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள்.
3. படுக்க கூடுதல் தலையணை உபயோகிக்கவும்
இரவில் படுக்க தலைக்கு கூடுதல் தலையணை உபயோகிப்பதால், கண் வீக்கத்தை தடுக்கும். கண்ணுக்கு அடியில் நீர் கோர்வதையும் தடுக்கும். இதனால் பார்வை திறனும் அதிகரிக்கும். எனவே மறக்காமல் கூடுதலாக ஒரு தலையணை படுக்கும் போது உபயோகிக்கவும்.
4. காலைக் குளியல்
காலை எழுந்ததும் முதல் வேலை குளியல், முயற்சி செய்து பாருஙளேன். அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள். உங்களையும், உங்கள் தோலையும் புத்துணர்வோடு வைக்க கொஞ்சம் சுடு தண்ணீர், பச்சை தண்ணீர் கலவை போதும். நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
5. ஈரப்பதம்
தினமும் படுக்கும் முன் ஒரு டம்ளர் த்ண்ணீர் அருந்தினால், உங்கள் தோல் எப்பொழுதும் ஈரப்பதத்தோடு இருக்கும். உங்கள் முகமும் பொலிவோடு காணப்படும். சாதாரணமாக காலையில் முகத்திற்கு ஒப்பனை இட நீண்ட நேரம் எடுக்கும், ஆனால் இதை செய்து பார்த்தால் வித்யாசத்தை நீங்களே உண்ர்வீர்கள். குறைந்த் நேரம் போதும் முகத்திற்கு ஒப்பனை இட, ஏனென்றால் முகத்தின் ஈரத்தன்மை இருப்பதை நீங்களே உண்ர்வீர்கள்.