Home ஆரோக்கியம் இரவு நன்றாக தூங்க

இரவு நன்றாக தூங்க

27

Captureகடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு வீட்டிற்கு சென்றவுடன் உடைகளை மாற்றி விட்டு கடகடவென சாப்பிடுவார்கள். உடனே டிவியை பார்த்தபடி படுக்கைக்கு செல்வார்கள். மனைவியே, குழந்தைகளே எதாவது கேட்டால் கோபம் கொப்பளிக்கும். இவர்களுக்கு இரவு நீண்ட நேரமாகியும் தூக்கம் வராது.

இதன் காரணமாக மறுநாள் காலை சீக்கரம் எழுந்திரிக்கலாம் சோம்பல் ஏற்படும். பின்னர் அலுவலகம் சென்றாலும் மந்தமான நிலையிலேயே உடல் இருக்கும். மனமும் சோர்வடையும். தூக்கம் வரவில்லை என்ற புலம்பலே இது போன்றவர்களிடம் அதிகம் கேட்கும்.‘‘அப்படிப்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கை முறையை சிறிது மாற்றினால் இரவில் நன்றாக தூங்கலாம்…’’என்கின்றனர் நிபுணர்கள்.

தினமும் வேலை முடிந்த உடனேயே படுக்கைக்கு சென்று விடக்கூடாது. வீட்டிற்கு வந்த உடன், நன்றாக குளித்து, ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். ‘டிவி’ மற்றும் கம்ப்யூட்டர்களை ஆப் செய்ய வேண்டும். அடுத்த நாள் அணிய வேண்டிய ஆடைகளை எடுத்து வைக்க வேண்டும். பின்னர், இதமான இசையை ரசித்த படி அடுத்த நாள் வேலையை திட்டமிட வேண்டும். இவ்வாறு மனதை அமைதிப்படுத்தி விட்டு தூங்கச் சென்றால், நன்றாக தூக்கம் வரும்.

இரவு உணவை சாப்பிட்ட உடனேயே தூங்க செல்லக்கூடாது. 60 முதல் 90 நிமிடங்கள் கழிந்த பின்னர் தூங்கச் சென்றால் தான் நன்றாக தூக்கம் வரும். இடைப்பட்ட நேரத்தில் வாழ்க்கை துணையுடன் சிறிது மனம் விட்டு பேசுங்கள். அன்றைய சுவாரஸ்சிய சம்பவங்களை பேசி மகிழுங்கள். இதனால் மனமும் ரிலாக்ஸாக இருக்கும். தூக்கமும் நன்றாக வரும். பிரிட்டனில் நடந்த ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.