தற்போது ஐக்கிய நாடுகள் நடத்திய ஆய்வில் உலகிலேயே இந்தியாவில் தான் கர்ப்பிணிகள் அதிகம் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு மற்றும் சுகாதாரத்திட்டம் போன்றவற்றால் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் கற்பம் அடைந்த பெண்கள் அதிகம் மரணமடைகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையில் உலக அளவில் 2,87,000 பெண்கள் கற்பகாலத்தின் போதும், குழந்தைபெரும் போதும் மரணமடைவதாக 2010ம் ஆண்டு கணக்கீட்டின்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்போது 19% மரணம் இந்தியாவிலும், 14% மரணம் நைஜீரியாவிலும் மற்றும் இதர 8 நாடுகளில் 40% மரணமும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்குக் காரணம் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் அதிக ரத்தபோக்கு, கற்பகாலத்தின்போது ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது என்றும் கூறுகிறது.
மேலும் அந்த அறிக்கையின் படி 1990ம் ஆண்டில் 10,00,000 குழந்தை பிறப்பிற்கு 400 மரணங்கள் என்ற நிலையில் இருந்து, 2010ம் ஆண்டு 10,00,000 குழந்தைகள் பிறப்பிற்கு 210 மரணங்கள் என்றும் குறைந்துள்ளதாக கூறுகிறது. தற்போது மரண விகிதம் கடந்த இருபது வருடங்களில் பாதியாக குறைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.