Home சூடான செய்திகள் இந்த விஷயம் பேசினால் பெண்களுக்கு பிடிக்காதாம்!

இந்த விஷயம் பேசினால் பெண்களுக்கு பிடிக்காதாம்!

27

men-3-500x500சில விஷயங்கள் ஆண்கள் கூற மாட்டார்களா என பெண்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கும். அதே போல சில விஷயங்களை ஆண்கள் கூறினால் பத்திரகாளியாக மாறும் அளவிற்கு கோபம் வரும் பெண்களுக்கு. இந்த குணம் கிட்டத்தட்ட நாணயத்தின் இரு பக்கத்தை போல தான்.
நண்பர்களாக இருக்கும் போது எவ்வளவு வேண்டுமானலும் கழுவி, கழுவி ஊற்றலாம். சிரித்துக் கொண்டு போய்விடுவார்கள். சண்டையும் பெரியளவில் வராது. ஆனால், நீங்கள் காதலனாக இருந்தால் கதை அம்பேல். நீ எப்படி இத சொல்லாம் என கடித்து கொதறிவிடுவார்கள்.
நண்பனுக்கு இருக்கும் உரிமை கூட காதலனுக்கு இல்லையா என நீங்கள் எண்ணலாம். ஆனால், பெண்கள் எப்போதும் மிகவும் நெருக்கமான நபர்களிடம் தான் அதிகமாக கோபித்துக் கொள்வார்கள். ஓகே, இனி எந்தெந்த விஷயம் ஆண்கள் பேசினால் பெண்கள் பிடிக்காது என காணலாம்…
செக்ஸ் டாக் – காதலிக்கும் போது ரொமான்டிக்காக பேசுவது ஓகே. ஆனால், செக்ஸ் பற்றி, அந்த விஷயங்கள் குறித்தே மறைமுகமாக பேசுவது சுத்தமாக பிடிக்காது என பெண்கள் கூறுகின்றனர்.
நடை உடை பாவனை – உன் நடை இப்படி இருக்கிறது, உடையை இப்படி தான் உடுத்த வேண்டும், இப்படி உடை உடுத்த வேண்டாம், ஏன் இப்படி பாவனை செய்கிறாய் என குறை கூறி பேசுவது.
அழகு விமர்சனம் – பெண்களை அழகாக இல்ல என நேரடியாக கூற வேண்டும் என்ற அவசியமில்லை. ஹேர் ஸ்டைல் அல்லது லிப்ஸ்டிக் அதிகமாக இருக்கிறது என கூறினால் கூட அதை விமர்சிக்க நீ யார் எனும் அளவிற்கு கோபம் வருமாம்.
வர்ணித்து பேசுதல் (மற்ற பெண்களை) – தங்கள் முன்னரே, வேறு பெண்களின் உடை, அழகு குறித்து வர்ணித்து பேசினால் பெண்களுக்கு பிடிக்காதாம்.
குடும்ப சமாச்சாரங்கள் – அவர்களை எவ்வளவு கேலி கிண்டல் செய்தாலும் ஓகே-வாம். ஆனால், என் குடும்பம் இப்படி, உன் குடும்பம் அப்படி என்றெல்லாம் வகை பிரித்து பேசினால் அறவே பிடிக்காதாம் பெண்களுக்கு.
பெற்றோர்களை குறைகூறுதல் – அவரது பெற்றோரை விமர்சிக்க கூடாது, அவர்களது வளர்ப்பு பற்றி பேசக் கூடாது. என்னவாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு முன்னர் அவர்களது பெற்றோரை பற்றி பேசினால் கோபம் வரும். இது அனைவருக்கும் பொதுவானது தான்.
வெளிப்படையாக பேசாதிருப்பது – சில விஷயங்களை ஆண்கள் வெளிப்படியாக கூறிவிட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதாவது நீ அழகா இருக்க, உன் டிரஸ் சூப்பர், புடவை-ல லட்சுமி போல இருக்க என்பன போன்றவற்றை நீங்கள் மனதார வெளிப்படையாக பேசலாம்.
பேசியதையே திருப்பி – பேசுதல் மேலும், அவர்ளது அழகை (பாராட்டும் போது மட்டும்) பற்றி பேசுவதை தவிர. மற்ற விஷயங்களை பேசியதையே, பேசினால் பெண்களுக்கு பிடிக்காதாம்.