பால்வினை நோய் தொற்று ஒன்று தான் உங்கள் இல்லற / தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் என எண்ண வேண்டாம். ஒருசில சுகாதார விஷயங்கள் கூட உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சீர்கெடுக்கும். முக்கியமாக உள்ளாடை சமாச்சாரங்கள்.
ஒருசிலர் உள்ளே அணிவது எப்படி இருந்தால் என எண்ணுவதுண்டு. வெளிப்புற தோற்றம் அழகாக இருந்தால் போதுமா? உட்புற தோற்றம் அழகாக இல்லை எனிலும், ஆரோக்கியமற்றதாக இருக்க கூடாது. உள்ளாடை என்ற ஒற்றை விஷயத்தில் நீங்கள் செய்யும் தவறு, உங்கள் தாம்பத்தியத்தை பாதிக்கும்…
தவறு! உள்ளாடை விஷயத்தில் தான் பெரும்பாலானோர் அவர்களுக்கே தெரியாமல் தவறு செய்கிறார்கள். உள்ளாடை அணியாமல் இருப்பது கூட தவறில்லை. ஆனால், ஒரே உள்ளாடையை இரண்டு, மூன்று நாட்கள் – அல்லது ஒரே உள்ளாடையை பல மாதங்கள் (அ) வருடக்கணக்கில் புதிது மாற்றாமல் பயன்படுத்துவது போன்றவை தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும்.
பிறப்புறுப்பு! ஒரே உள்ளாடையை அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தி வரும் உள்ளாடைகள் பிறப்புறுப்பு பகுதியில் தொற்றுகள் மற்றும் அலர்ஜிகள் உண்டாக காரணியாக இருக்கிறது. இதனால், ஏற்படும் பிறப்புறுப்பு பாதிப்புகள் தாம்பத்திய வாழ்வை கெடுக்கும்.
6 மாதங்கள்! கணவன் மனைவி இருவரும் 6 மாதத்திற்கு ஒருமுறை உள்ளாடையை புதியதாக மாற்றிவிட வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் எத்தனை தான் துவைத்தாலும், உள்ளாடையில் ஏற்படும் அதிகப்படியான பாக்டீரியா மற்றும் வியர்வை போன்றவை தொற்று, எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனையை உண்டாக்கும்.
சுகாதாரம்! சுகாதாரமற்ற தாம்பத்தியமும் கூட வாழ்விலும், ஆரோக்கியத்திலும் தீய தாக்கங்களை உண்டாகும். முக்கியமாக வெளியே கூறாவிட்டாலும், உங்கள் சுகாதார நிலை கண்டு உங்கள் துணை வருந்துவதும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
செலவு… தேவையில்லாத, அநாவசியமாக நாம் எவ்வளவோ செலவு செய்கிறோம். இது நம் இல்லறம் மற்றும் ஆரோக்கியத்தை வலுவாக வைத்துக் கொள்ள உண்டாகும் செலவு. இதற்கு தயங்குவதோ அல்லது இதற்கெல்லாம் செலவு செய்ய வேண்டுமா என்ற எண்ணத்தை வளரவிடாமல். சுகாதாரமான வாழ்வை வாழ துவங்குங்கள்.