இது கொஞ்சம் வித்தியாசமான தகவல். ஆனால் சுவையானவை. என்ன வெனப் படித்துப் பாருங்களேன்.
ஆண் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஆறு முறை செக்ஸ் பற்றி நினைக்கிறான். வாரத்திற்கு எழுநூற்று ஐம்பது முறை. இதில் கனவுகள் அடங்காது. மணமான தம்பதியர் சராசரியாக வாரத்திற்கு 3 முறை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்கிறார்கள்.
உலகிலேயே ஆண்களுக்கான செக்ஸ் பத்திரிகைகளில் ப்ளே பாய் மற்றும் பென்ஹவுஸ் ஆகியவைதான் சக்கைப் போடு போடுகின்றன. இவற்றின் மாத விற்பனை அறுபது லட்சம் பிரதிகள்.
சைக்காலஜி டுடே என்ற ஒரு பத்திரிகை நடத்திய ஆய்வில் சுமார் 55 விழுக்காடு ஆண்கள் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் வாழ்கிறார்கள்.
மணமான ஆண்கள் எல்லாருமே ஏக பத்தினி விரதன்கள் அல்ல. அவர்களில் 22 முதல் 66 விழுக்காடு வரை கள்ளத் தொடர்பு வைத்திருக் கிறார்கள்.
புதிய திருமண பந்தங்களில் சுமார் 51 விழுக்காடு விவாகரத்தில் முடிவடைந்து விடுகிறது.
64 விழுக்காடு பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து பெறும் அன்பு போதுமானதாக! இல்லை என கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஆண்களோடு உள்ள உணர்வுப் பூர்வமான தொடர்பில் அடிப்படை மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என 98 விழுக்காடு பெண்கள் நினைக்கிறார்கள்.
குடும்பத்தில் நீடித்த அன்பு, சண்டை சச்சரவில்லாத நிலை ஆகியவை எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் உள்ள தம்பதியர் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். செக்ஸில் திருப்தியில்லாத போதுதான், அதன் வெளிப்பாடாக இந்தப் பிரச்சினைகள் வெடிக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆணுக்கு உணர்ச்சி அதிகமா?
பெண்ணுக்கு உணர்ச்சி அதிகமா என கேள்வி கேட்டால் உடல் அளவில் அதிக உணர்ச்சியை விரும்புகிறவர்கள் ஆண்கள். அவர்கள் செக்ஸைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். உள்ளத்து அளவில் அதிக உணர்ச்சியை விரும்புகிறவர்கள் பெண்கள். அவர்கள் செக்ஸைவிட காதலை விரும்;புகிறார்கள். தங்கள் கணவர் தங்கள் மீது மட்டுமே பிடிப்புடன் இருக்கவேண்டும் என்பது இவர்களின் உள்ளார்ந்த ஆசை.