Home சூடான செய்திகள் இணையத்தில் லட்சுமி மேனனின் ஆபாச படம்; ‘சதி’ என மறுத்த லட்சுமி மேனன்

இணையத்தில் லட்சுமி மேனனின் ஆபாச படம்; ‘சதி’ என மறுத்த லட்சுமி மேனன்

77

என்னைக் களங்கப்படுத்தவும் படிக்க விடாமல் தடுக்கவும் சதி நடக்கிறது என்று தனது பெயரில் வெளியாகியுள்ள ஆபாசப் படம் குறித்து நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நடிகை ஹன்சிகாவின் ஆபாச படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்களிலும் சமீபத்தில் பரவியுள்ளது.

இந்த வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன்தான் என்றும், மேலும் சிலர் இது போலியானது என்றும் கூறிவருகின்றனர். ஆனால் இதனை நடிகை லெட்சுமி மேனன் மறுத்துள்ளார்.

இப்போது இந்த வீடியோ குறித்து லட்சுமிமேனன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “அந்த ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கும் சம்மந்தமே இல்லை. அந்த வீடியோ உண்மையானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். நான் இப்போது பிளஸ்டூ தேர்வுக்காக படித்துக் கொண்டு இருக்கிறேன்.

என்னை படிக்கவிடாமல் செய்யவும், கவனத்தை திசை திருப்பவும் இந்த சதி செயல் செய்யப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

திரிஷா, ஹன்சிகா, லெட்சுமி மேனன் என வரிசையாக நடிகையின் பெயரில் ஆபாச படங்கள் வெளிவருவது அநாகரிகமானது மட்டுமல்ல, அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையையும் உருவாக்குகிறது.

அது உண்மையோ, போலியோ அது எந்த வகையிலும் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது அல்லது அவர்களின் மனதை புண்படுத்துவது அநாகரிகமான செயலாகும்.