துவரம் பருப்பு – 100 கிராம்
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 5 இலை
கடுகு – தாளிக்க
சீரகம் – அரை தேக்கரண்டி
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
ப்ரஸர் குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், பெருங்காயம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
ப்ரஸர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை மத்தால் நன்கு கடைந்து விடவும்.
பி்ன்னர் அந்த கலவையில் தாளித்தவற்றை கொட்டி கிளறவும்.
சுவையான சாம்பார் ரெடி. இதனை இட்லியுடன் பரிமாறவும்.