Home பெண்கள் உடல் கட்டுப்பாடு இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும் கீகல் பயிற்சிகள்!

இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும் கீகல் பயிற்சிகள்!

51

Kikal-exercises-strengthen-theஜிம்மில் தரப்படும் உடற்பயிற்சியில் மிக முக்கியமானதும் மிக அத்தியாவசியமானதும் ப்ளோர் எக்ஸர்சைஸ் எனப்படும் தரைப்பயிற்சிகள் தாம் நமது யோகப்பயிற்சிகளை
முன்னிறுத்தியே பலவித பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கீகல் பயிற்சிகள் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக செய்யப்படுகின்றது. தரையில் படுத்துக்கொண்டு இடுப்பு தசைகளை சுருக்குதலும் பின்பு விரிவாக்குதலும் என பல வித நிலைகளால் இப்பயிற்சிகள் செய்யப்படுகிறது. இப்பயிற்சி பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தசை தளர்தலை சரி செய்ய கூடிய பயிற்சியாகும்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்று பகுதியில் ஏற்படும் தேவையற்ற சதையை படிப்படியாக குறைக்க முடியும்.

சின்ன இடைக்கு சிறப்பு பயிற்சி!
முதலில் விரிப்பில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில், கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவாக மூச்சை உள்
இழுத்தபடியே உடம்பை மேலே உயர்த்தவும். முகத்தை இடது பக்கம் திருப்பு, வலது கால் பாதத்தைப் பார்க்கவும்.
15 நிமிடங்கள் வரை அதே நிலையில் இருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி, திரும்பவும் பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல் மூச்சை உள் இழுத்தபடி வலது பக்கம் திரும்பி, இடது கால் பாதத்தைப் பார்க்கவும். 15 நிமிடங்கள் எண்ணியவுடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும்.
இதுபோல் தொடர்ந்து மூன்று முதல் ஐந்து முறை செய்யவும். பார்க்க இந்த பயிற்சி எளிமையாக தெரிந்தாலும் பயிற்சி செய்யும் போது மிகவும் கடினமாக இருக்கும். நன்கு பழகிய பின்னர் ஐந்து முறைக்கு அதிகமாகவும் இந்த பயிற்சியை செய்யலாம். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
பலன்கள்….இந்த பயிற்சி செய்வதால் முதுகு வலி படிப்படியாக குறையும். முதுகுத்தண்டு வலுப்பெறும். மாதவிடாய் கோளாறுகளைச் சரிசெய்யும். மலச்சிக்கல் குணமாகும். வயிற்றுச் பகுதியில் உள்ள சதைகள் நீங்கி, ரத்த ஓட்டம் அதிகரிக்கும் முதுகுத் தண்டு வடத்தில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்சனைகளுக்கு இந்த பயிற்சி மிகவும் ஏற்றது.