Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஆரோக்கியமாக வாழ தியானம் செய்வோம்

ஆரோக்கியமாக வாழ தியானம் செய்வோம்

28

Captureவாழ்க்கையில் மனிதனுக்கு அவசியமான பயிற்சியை தருவது தியானம்.

தியானம் செய்வதால் உடலும், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு தியானம் உதவும் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. பழங்காலத்திலேயே முனிவர்களும், துறவிகளும் தியானம் கடைப்பிடித்ததற்கான சான்றுகள் உள்ளன. நம்முடைய சில உடல் குறைபாடுகளுக்கு தியானம் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது.

தியானமானது ஓய்வில்லாது சலனத்துடன் இருக்கும் மனதை சாந்தப்படுத்துகின்றது. 10 நிமிடம் தியான நிலையில் உட்கார்ந்து சுவாசிக்கும்போது தூய்மையான காற்று உள்ளே செல்கிறது. அதனால் மார்பு விரிவடைந்து நம் உடல் புத்துணர்வை பெறுகிறது. தியானம் செய்வதால் நம் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

தியானம், கற்கும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

மூளையை சமச்சீராக செயல்பட வைத்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு இளமையையும் தருகிறது.

தீய எண்ணங்களை விரட்டி, உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.

நமது உடலின் மொத்த செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. தேவையற்ற எதிர்மறையான எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது.

மது, சிகரெட் போன்ற தீய செயல்களில் இருந்து விடுபட உதவுகிறது.

பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்து, கவலையை போக்குகிறது.

சகிப்புத் தன்மையை அதிகரித்து, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

நம் கவனத்தை கூர்மைப்படுத்துகிறது. தியானம் செய்வதால் படிப்பு, வேலை என்று எந்த நிலையிலும் நம் கவனம் சிதறாது.

நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது.

தியானம் செய்வதால் நம் மனம் அமைதியடைகிறது.

தசைகளுக்கு ஏற்படும் இறுக்கத்தை போக்குகிறது. ‘அலர்ஜி’ மற்றும் ‘ஆர்த்தரைடிஸ்’ போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

மனக்கவலையை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஆற்றல், சக்தி, வீரியத்தை அதிகரிக்கச் செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

உடலில் உள்ள திசுக்களை பாதுகாத்து தோலுக்கு பலம் கூட்டுகிறது.

இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அண்டவிடாமலும், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கின்றது.

ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது.

நாட்பட்ட நோய்கள் குணமாவதற்கும், வியர்வையை கட்டுப்படுத்துவதற்கும் தியானம் பயனளிக்கிறது.

உடலில் உள்ள சக்தி விரயமாகாமல் பாதுகாத்து விளையாட்டில் ஆர்வத்தை தூண்டுகிறது.

உடலுக்கு தேவையான எடையை அளித்து, நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக வைக்கிறது.

தன்னம்பிக்கையை அதிகரித்து நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.

தேவையற்ற அச்சத்தை போக்கி, மனோ நிலையை சரியாக இருக்கச் செய்கிறது.

நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி குறிக்கோளில் கவனம் செலுத்த உதவுகிறது.

முகம் பிரகாசமடைந்து, மனம் அமைதி பெறுவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கிறது.

மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.

ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதய துடிப்பு வேகத்தை கட்டுப்படுத்துகிறது.

இதய நோய்களை கட்டுப்படுத்தி, உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்துகிறது.

அறிவுத்திறனை அதிகரிக்கச் செய்கிறது.

தியானம் நம்மை மகிழ்விக்கும். அதனால் நாமும் தியானம் செய்வோம் பிறரை சந்தோஷப்படுத்துவோம்!