தேவையான பொருட்கள் :
ஆப்பிள் – ஒரு கப்,
துவரம்பருப்பு – அரை கப்,
தக்காளி – கால் கப்,
கடுகு, சீரகம் – தலா அரைத்தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க தேவையானவை :
துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
தனியா – 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை :
* ஆப்பிள், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
* வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ஆப்பிள் துண்டுகளை மூன்று கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
* பிறகு, அதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த மசாலா, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும்.
* மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
* கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.
* சுவையான ஆப்பிள் ரசம் ரெடி. அதை சூப்பாகவும் குடிக்கலாம்.