1. போர்னோகிராஃபியானது, தனக்கு பிடித்த ஒரு பெண்ணை இணையத்தில் தேடுவதற்காக எனத் தொடங்கப்பட்டு,செக்ஸ் போதை/அடிமைத்தனத்தில் முடிகிறது!
2. பிரிட்டனைச் சேர்ந்த Darryl, (வயது 17) எனபவருக்கு போர்னோகிராஃபி ஒரு பிரச்சினையாக தெரியவில்லையாம்! (மக்கள் சிந்திக்க?!)
3. 16 வயதான Malcolm, மற்றும் 14 வயதான Colin என்ற இருவரும் போர்னோகிராஃபியால், தங்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகச் சொல்லி செக்ஸ் தெரபிஸ்ட் மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள்!
4. பாதிக்கப்பட்ட இருவரின் பழக்க வழக்கங்களில், கோபம், ஆக்ரோஷம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்றவை போர்னோகிராஃபியால் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்!
5. இப்பிரச்சினையில் பேற்றோர்களின் பங்கு என்ன, அதை எப்படிச் சமாளிப்பது என்று சொல்கிறது இக்குறும்படம்!
அறிவுரைகள்!
1. போர்னோகிராஃபி காணொளிகள், செக்ஸ் கல்வி காணொளிகள் அல்ல. அவை எல்லாமே இணையத்தில் சுலபமாக விலைபோகும் செக்ஸ் செயல்பாடுகளை, தேர்ந்த நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை/நாடகம் அல்லது இயக்கப்பட்ட ஒரு நிகழ்வே தவிர, உண்மையான/யதார்த்தமான செக்ஸ் செயல்பாடுகள் அல்ல!!
2. போர்னோகிராஃபியில் வரும் காணொளிகளும், நிஜ உலக செக்ஸ் வாழ்க்கையும் முற்றிலும் வேறானவை, இதில் சுகாதாரமின்மையும் இருப்பதை கவனித்தல் அவசியம்!
3. நமக்குக் காண்பிக்கப்படாத/தெரியாத போர்னோகிராஃபி நிதர்சனங்கள் சில உண்டு. உதாரணமாக, போர்னோகிராஃபியால் ஏற்படும் குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம் மற்றும் பல தற்கொலைகள்!!
4. போர்னோகிராஃபியானது செக்ஸ் வாழ்க்கையை உருக்குலைத்துவிடும், செக்ஸ் குறித்த முற்றிலும் தவறானதொரு புரிதலை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில் கொள்க!!
5. செக்ஸ் செயல்பாடுகளை மட்டுமே சொல்லும் போர்னோ, அதன்பின் ஏற்படும் பழக்கவழக்க மாற்றங்களையோ, அதிர்ச்சிகரமான பல பின் விளைவுகளைப் பற்றியோ ஒருபோதும் சொல்வதில்லை!!
6. எல்லாவற்றிற்கும் மேலாக, நிஜ உலக உறவுகளை புறக்கணிக்கும் ஒரு மோசமான ஒரு நிலைக்குக் கூட ஒருவரை மாற்றக்கூடியது இந்தப் பாழாய்ப்போன போர்னோகிராஃபி!!