சிறுவயதிலிருந்தே ஆபாசத் திரைப்படங்களை பார்ப்பதற்கு அடிமையாகியிருந்த பெண் ஒருவர் நான்கு முறை திருமணம் செய்தும் தாம்பத்தியத்தில் திருப்தியடையாத காரணத்தால் அனைத்து திருமணத் தொடர்புகளையும் துண்டித்துள்ள சம்பவமொன்று காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அழகிய தோற்றத்தைக்கொண்ட 29 வயதான இப்பெண் அதிகளவாக ஒப்பனை செய்து தனது அழகை மெருகேற்றிவரும் இவர் 2005 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் முதலாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அத்தொடர்பின் மூலம் அவருக்கு குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இந்நிலையில், முதலாவது கணவர் திருமணத்தின் பின்னர் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது இப்பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டிருந்த நிலையில் முதலாவது திருமணம் நிறைவடைந்து இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் 2007 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
எனினும், இரண்டாவது கணவரிடமும் தனக்கு திருப்தியில்லாத காரணத்தினால் 3 வருடங்களே இந்த திருமண வாழ்க்கை நிலைத்திருந்தது.
அதன்பின்னர் அவர் தனக்கு ஏற்கனவே இரு தடவைகள் திருமணமாகிய விடயத்தை மறைத்து மற்றுமொருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்நபரை 2010 ஆம் ஆண்டு மூன்றாவதாக மணந்துகொண்டார்.
ஆனபோதிலும் இரண்டொரு வருடங்களில் அவ்வாழ்க்கையும் அவருக்கு கசந்துபோனமையினால் குழந்தைகளை பெற்றுக்கொள்ளாமலே வாழ்ந்து வந்த நிலையில் முன்னதாக தான் மூன்று தடவைகள் திருமணமான விடயத்தை மறைத்து, 2014 ஆம் ஆண்டு மற்றுமொருவரை காதலித்து அதே வருடம் அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டு 4 ஆவது கணவரான அந்நபருடன் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், நான்காவது திருமணத் தொடர்பினூடாக மீண்டுமொரு முறை குழந்தை ஒன்றை பிரசவித்தார். குழந்தை பிறந்த சிறிது காலம் செல்கையில் தற்போதைய திருமண வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க எத்தனித்துள்ளார்.
அதற்கிடையில் தனது அழகிய மனைவி சிறுவயதிலிருந்தே ஆபாசப் படங்களை பார்ப்பதற்கு அடிமையாகி வந்திருந்த விடயம் நான்காவது கணவருக்கு தெரியவந்ததுடன் அப்பெண்ணால் மறைத்து வைக்கப்பட்டிருந்த முந்தைய மூன்று திருமணங்களுக்கும் சாட்சியான 3 திருமணச் சான்றிதழ்களும் கணவருக்கு கிடைத்துள்ளன.
இதனையடுத்து, நான்காவது கணவர் மூன்று திருமண சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் தனது மனைவிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், விவாகரத்து பெறாமல் பலரை திருமணம் செய்து மோசடி செய்த குற்றச்சாட்டில் நான்கு கணவர்களின் மனைவியான 29 வயதான சந்தேகநபருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.