ஆபாச இணையதளங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், இணையதளத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த இணையதளங்களை பயன்படுத்தும் போது, ஆபாச படங்களும், ஆபாச விளம்பரங்களும், பாலியல் தொழிலுக்கு அழைக்கும் விளம்பரங்களும் இடம் பெற்றுள்ளது.
இது போன்ற விளம்பரங்களால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலர் பாதிக்கப்படுள்ளனர். எனவே, இந்த இணையதளங்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி சென்னை சிபிசிஐடி போலீசாரிடம் அக்பர் அகமது என்பவர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மனு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, அக்பர் அகமது என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நலமனு தாக்கல் செய்தார்.
ஆனால் தமது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கை போலீசார் எடுக்கவில்லை என்றும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதற்கு பதில் அளித்த காவல்துறை, ஆபாச இணையதளம் குறித்த வழக்கில், இதுவரை 244 பேர் கைது செய்யப்பட்டு அதில். 10 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையின் அடுத்த நடவடிக்கை குறித்து செப்டம்பர் 16ம் தேதி அறிக்கை செய்ய தாக்கல் நீதிபதி உத்தவிட்டார்.