மெல்லியதாகவும், நீளமாகவும் இருப்பதுதான் அசுவகந்தாவில் (அமுக்கரா கிழங்கு) சிறந்த ரகம். இவற்றைத் தேர்ந்தெடுத்து வேர்களைத் தூள் செய்து துணியில் இட்டு சலித்து எடுக்க வேண்டும்.
சலித்து எடுத்ததில் 250 கிராம் எடையுள்ள தூளை எடுத்து ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலில் போட்டு இளஞ்சூட்டில் காய்ச்ச வேண்டும். பால் முழுவதும் ஆவியாகிய பிறகு தீய்ந்து போக விடாமல், பாத்திரத்தின் அடியில் பசையாகிவிட்ட பொடியை எடுத்து ஒரு தட்டில் வைத்து நிழலில் அல்லது பேன் காற்றில் உலர விட வேண்டும்.
முற்றிலும் உலர்ந்த பிறகு மீண்டும் பொடியை முன்பு செய்தது போல பாலில் இட்டுக் காய்ச்ச வேண்டும். இதே போல தொடர்ந்து 7 முறை செய்ய வேண்டும். பின்னர் இப் பொடியை எடுத்து பாதுகாப்பாக வைத்து தினச படுக்கச் செல்லும் முன் 1 டேபிள் ஸ்பூன் பொடியை 1 கப் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். 41 நாள் சாப்பிட வேண்டும். ஆண்மை அதிகக்கும். விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகக்கும். பிரசவித்த பெண்களுக்கு பால் சுரப்பை அதிகக்கச் செய்யும்