Home ஆண்கள் ஆண்மைக் குறைவும் – காரணமும்!

ஆண்மைக் குறைவும் – காரணமும்!

35

downloadஆண்மைக் குறைவு பற்றிய கட்டுரைகள், விளம்பரங்கள் வந்தால் அது உண்மையா? பொய்யா என்பதைக் கூட தெரிந்துகொள்ள முயற்சிக்காமல், அதை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்ற உணர்விலேயே மூழ்கிப் போய் பணத்தை வாரியிறைத்து செலவு செய்பவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.

இது ஒரு பிரச்சனை இல்லை என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். சிக்மண்ட் பிராய்டு காலத்தில் 99 விழுக்காட்டினருக்கு வரும் ஆண்மைக் குறைவிற்கு மனநிலையே காரணம் எனக் கருதப்பட்டது. அண்மையில் நடந்த ஆராய்ச்சிகள் சுமார் 25 விழுக்காடு அளவு நபர்கள் மனநிலை காரணமாக இந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கின்றன.
ஆண்மைக் குறைவை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் சிட்டுக்குருவி லேகியம் முதல், ஆணுறுப்பில் தடவும் எண்ணெய்கள், களிம்புகள் ஆகிய பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாந்து கொண்டுள்ளனர்.

இவற்றைத் தீர்ப்பதற்காக நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. முதலில் ஆண்மைக் குறைவிற்கான காரணங்களைப் பார்ப்போம்.
எல்லா ஆண்களுக்குமே வாழ்நாளில் ஓரிரு முறை விறைப்புத் தன்மை அடையாமல் போவதுண்டு. அதிகமான உடலுழைப்பு, மிகுந்த மனக்கவலை, புதிய பெண்ணுடன் பாலுறவு, புதிய சூழலில் படபடப்பான நிலையில் பாலுறவு கொள்ளுதல், அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப் பழக்கம், நீரிழிவு, மனநோய்கள், இரத்தக் கொதிப்பு, சில நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் காரணமாக ஆணுறுப்பு விறைப்படையாத நிலை வருகிறது.
இராசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத் துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஆண்மைக் குறைவு வரும் வாய்ப்பு அதிகம்.

இருபது வயதுள்ள ஏழு ஆண்களில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது. வயது கூடக்கூட பாதிப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அறுபது வயதில் இரண்டு ஆண்டுகளில் ஒருவருக்கு இந்தப் பிரச்சனையிருக்கும். எழுபது வயதில் ஆசையிருக்கும் ஆனால் பத்து விழுக்காட்டினருக்கு மேல் பாலுறவு கொள்ள முடிவதில்லை.