Home ஆண்கள் ஆண்மை குறைவும் சிகிச்சை முறைகளும்

ஆண்மை குறைவும் சிகிச்சை முறைகளும்

31

imagesஆண்மைக் குறைவிற்கான காரணம் என்ன என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைக்கான நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கருவிகள் மூலம் சிகிச்சைகளைப் பெறும்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும்.

ஆண்மைக் குறைவை சரி செய்வதற்கு காற்றழுத்தச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, மருந்துகள் மூலம் சில குறிப்பிட்ட காரணிகளுக்கான சிகிச்சை, எவ்விதத்திலும் சரிசெய்ய இயலாதவர்களுக்கு ‘பினைல் புராஸ்தசிஸ்’ என்ற சிகிச்சை ஆகியவை நடைமுறையில் உள்ளன.

இவை தவிர, பாலியல் ஆலோசனை, செக்ஸ் தெரபி, செக்ஸ் ஹிப்னோ தெரவி, ஹார்மோன் சிகிச்சைகள் ஆகியவையும் நடைமுறையில் உள்ளன.

தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை மேற்கொண்டால் ஆண்மைக் குறைவுப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

மனைவியின் ஒத்துழைப்பு

கணவனின் உறுப்பு எளிதில் விறைப்படையாத நிலை இருந்தால் அதற்காக கணவன் விரக்தியடையும் வகையில் பேசுவது மற்றும் நடந்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்தப் பிரச்சனை எதனால் ஏற்பட்டது என்பதை அறிய முடிந்தால் அதற்கு வழிசெய்யலாம். இல்லாவிட்டால் அதிக ஒத்துழைப்பு, ஆறுதலான வார்த்தைகள், அன்பான நடவடிக்கைகள் மூலமாக இப்பிரச்சனையைக் கையாளலாம்.

பாலுறவு மூலமாக மட்டுமின்றி முன்விளையாட்டுகளில் கூட உச்ச இன்பத்தை அளிக்க முடியும் என்பதை கணவன் புரிந்துகொள்ள வழிசெய்வது நல்லது.