Home பாலியல் ஆண்குறி பாலியல் நோய்கள்

ஆண்குறி பாலியல் நோய்கள்

58

நரம்பு வித்திர ஆண்குறி நோய்.

திரிதோஷ குற்றத்தால் ஆண்குறி நரம்புகளில் நீர் கோர்க்கும்.
குறியை சுற்றிலும் வீக்கம் காணும்.
இரத்தம் சிறுநீருடன் கலந்து வெளியேறும்.
மேலும் ஆண்குறியில் கட்டிகள் அதிகம் உண்டாகி அதிலிருந்து சீழும் இரத்தமும் வடியும்.
நரம்பு வலி சூடு ஏறி அதிகப்படும்.

தோட பேத ஆண்குறி நோய்.
ஆண்குறியில் மிளகு போல் கறுப்பு நிறத்தில் சதை தோன்றும்.
வெடித்து துர்நாற்றமுடன் புண்ணுண்டாகும்.
கட்டிகள்,கொப்பளங்கள் ஏற்பட்டு சில்விஷம் போன்ற குணங்களை தோற்று விக்கும்.

சதை வளர்த்தி ஆண்குறி நோய்.

நரம்புகளில் மிகுந்த வேதனை தோன்றும்.
ஆண்குறியின் முனை மலரை நைய செய்யும்.
சருமத்தை பெருக்க செய்யும்.
சில் விஷம் உடலில் ஏறுவதை போன்ற குணங்கள் தோன்றும்.
நரம்புகள் தளர்ச்சியுறும்.
நடக்க இயலாது.
ஆண்குறியில் சதை மிக வளர்ந்திருப்பின் இந்நோய் அசாத்தியம் ஆகும்.

சுர ஆண்குறி நோய்.

இரத்தம் பெருகி கசியும்.
ஆண்குறியில் தாங்க முடியாத வேதனை உண்டாகும்.
குறியின் சருமம் பளபளப்புடன் பழுத்து நைந்து காணும்.
இக் கொடிய நோய் சோபத்தை உருவாக்கும்.
ஆண்குறியில் கட்டிகள் அதிகம் தோன்றும்.
சுர ஆண்குறி நோய் ஏற்பட்டால் மரணத்தை உண்டு பண்ணும் என்று அறியவும்.

எரியவு ஆண்குறி நோய்

ஆண்குறி துவாரம் பெரிதாகும்.
எப்போதும் எரிச்சல் தோன்றுவதோடு சோபதாபம் கொள்வர்.
கட்டிகள் அதிகமாகப் புடைத்து வேதனையும்,தணப்பும் உண்டாகும்.
சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியாகும்.
சிறுநீர் அடிக்கடி போகும்.
ஆண்குறியும் விம்மும்.
இறுதியில் காச நோயில் கொண்டு சேர்க்கும்.

தம்பன ஆண்குறி நோய்.

ஆண்குறி பளபளப்புடன் கடுஞ் சிவப்பு நிறமாக மாறும்.
ஆண்குறி மொக்கில்வேதனை ஏற்படும்.
சுக்கிலம் கசியும்.
ரண நாற்றம் வீசும்.
சில் விஷம் கொண்டதுபோல குறிகள் காணும்.
இதற்கு காந்த ரசவில்லை,நவக்கிரக வெள்ளை போன்ற மருந்துகள் கொடுக்க குணம் காணும்.இந்த மருந்துகள் கொடுத்தும் குணம் காண வில்லை என்றால் அசாத்திய நிலை என்று நிர்ணயப் படுத்தவும்.