Home சூடான செய்திகள் ஆண்களே இது உங்களுக்கு மட்டும்…

ஆண்களே இது உங்களுக்கு மட்டும்…

22

imagesஉடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், சரியான உணவுகளை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் போதும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வெறும் உணவு மற்றும் உடற்பயிற்சி போதாது.

அன்றாடம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களையும் கவனிக்க வேண்டும். பழக்கவழக்கங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதைத் திருத்திக் கொண்டு ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றி வந்தால், நிச்சயம் நம் முன்னோர்கள் போல் நாமும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். குறிப்பாக ஆண்களின் உடல்நலம் தான் வேகமாக பாதிக்கப்படுகிறது. எனவே ஆண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்களை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் 100 வயது வரை வாழலாம். சரி, இப்போது அந்த பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்ப்போம். தியானம் அன்றாடம் கண்களை மூடிக் கொண்டு 10-20 நிமிடம் தியானம் செய்து வந்தால், மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, தேவையில்லாத கவலைகள் அகலும்.

மேலும் தியானம் மன அழுத்தம் குறைய, நல்ல தூக்கம் கிடைக்க, இரத்த அழுத்தம் குறைய, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க, இதய செயல்பாடு மேம்பட உதவும் என்று நியூயார்க் நகரத்தில் உள்ள லெவன் லெவன் உடல்நல மையத்தைச் சேர்ந்த உடல்நல நிபுணர் கெர்ரி பஜாஜ் கூறுகிறார். தூக்கம் தற்போது பலரும் கிடைக்கப் பெறாமல் தவிக்கும் ஒன்று தான் தூக்கம். ஒருவருக்கு போதிய அளவு தூக்கம் இல்லாவிட்டால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதுவே முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

எனவே இரவில் நல்ல தூக்கத்தைப் பெற சரியான உணவுகளுடன், உடற்பயிற்சியை அன்றாடம் செய்து வந்தால் போதும். அதுமட்டுமின்றி, மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடல் புத்துணர்ச்சியுடன் இருந்தால், நாள் முழுவதும் ஆரோக்கியமாக செயல்பட முடியும். க்ரீன் டீ ஆண்கள் க்ரீன் டீயை தொடர்ச்சியாக குடித்து வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று ஐரோப்பிய இதழில் வெளிவந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. க்ரீன் டீ குடித்தால், மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, இரத்த அழுத்தம் குறையும், வாய் துர்நாற்றம் தடுக்கப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ப்ளாஷ் ப்ளாஷ் செய்வதன் மூலம் பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு, பற்கள் வெண்மையாக ஜொலிப்பதோடு, இப்பழக்கம் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். எப்படியெனில் ப்ளாஷ் செய்யாமல் இருந்தால், பற்களின் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட உணவுத்துகள்களை உட்கொண்டு, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் ஈறுகளை தாக்கி, இரத்தக்கசிவை ஏற்படுத்தி, உணவின் மூலம் உடலினுள் சென்றே உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். புரோபயோடிக்ஸ் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், உணவில் உள்ள சத்துக்களைப் பெற முடியும். அதற்கு புரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியா நிறைந்த தயிரை அன்றாடம் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

இதனால் குடல் மட்டுமின்றி, செரிமான மண்டலமும் சீராக செயல்படும். பாட்டில் தண்ணீர்/டின் உணவுகள் கடைகளில் விற்கப்படும் பாட்டில் தண்ணீர் மற்றும் டின் உணவுகளில் பிஸ்பீனால் ஏ என்னும் கெமிக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கெமிக்கல் உடலினுள் சென்றால், இனப்பெருக்க மண்டல குறைபாடு, நீரிழிவு, இதய நோய் போன்றவை வரக்கூடும். எனவே பாட்டில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதோடு, கடைகளில் டின்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடாதீர்கள். நார்ச்சத்துள்ள உணவுகள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் சீராக செயல்பட நார்ச்சத்து நிறைந்த டயட்டைப் பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும் ஆய்விலும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டோர் தான் நீண்ட நாட்கள் வாழ்ந்துள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படுவதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்.

உடலுறவு சமீபத்திய ஆய்வில் வாரம் 3 முறை உடலுறவு கொண்டால் சிறுநீரக கற்கள் கரைவதாக தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் அடிக்கடி உடலுறவு கொள்வதால், மன அழுத்தம் குறையும், நல்ல தூக்கம் வரும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், புரோஸ்டேட் புற்றுநோய் தடுக்கப்படும், இதய ஆரோக்கியம் மேம்படும். டியூக் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆய்வில் அதிக முறை உடலுறவு கொண்டால் நீண்ட நாட்கள் வாழலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இனிமேல் யோசிக்காமல், உங்கள் துணையுடன் சேர்ந்து படுக்கையில் விளையாடுங்கள். சரும பராமரிப்பு உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு. எனவே சருமத்தை ஒவ்வொரு நாளும் பராமரிக்க வேண்டும். அதுவும் வெளியே செல்லும் முன் வெயிலில் இருந்து பாதுகாப்பு கிடைக்க சன் ஸ்க்ரீன் தடவுவது, சருமம் வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் தடவுவது, கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி குளிப்பது என்று செய்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்கலாம்.