திருமணமாகி குழந்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் நேரத்தில், கருவுறுதலில் பிரச்சனை இருக்கும் போது தான் ஒவ்வொரு ஆணும் தங்களது கருவுறுதல் நிலையைப் பற்றியே யோசிக்கின்றனர். மேலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை இருந்தால், அதற்கான அறிகுறிகள் ஆரம்பத்லேயே தெரியாது.
இருப்பினும் ஒவ்வொரு ஆணும் தங்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் காரணிகள் என்னவென்று தெரிந்து கொண்டால், அந்த பிரச்சனையைத் தவிர்க்கலாம். ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுவதற்கு நவீன காலத்திய வாழ்க்கை முறை பழக்கம் தான் முதன்மையான காரணியாக உள்ளது. இங்கு தமிழ் போல்ட்ஸ்கை ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் நவீன காலத்திய வாழ்க்கை முறை பழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
வாழ்க்கை முறை நீண்ட நேரம் உட்கார்ந்தே பணியாற்றுகின்ற வாழ்க்கை முறையினால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று மலட்டுத்தன்மை. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து ஆண்கள் வேலை செய்வதால், விதைப்பை அதிகமாக வெப்பமடைந்து, அதனால் விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக கருவுறுதலில் பிரச்சனையை சந்திக்க வைக்கிறது.
தொழில்நுட்ப அடிமை தொடர்ச்சியாக மடிக்கணினிகளை மடியில் வைத்து நீண்ட நேரம் பயன்படுத்தும் போது, அதனால் தொடைப்பகுதியில் வெப்பம் அதிகரித்து, அதன் காரணமாக விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதுடன், விந்தணுவின் ஆரோக்கியமும் குறைகிறது.
மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல் ஆம், மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலும் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு காரணமாகும். அதிலும் பூச்சிக்கொல்லிகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் உணவுகள் அல்லது சுற்றுச்சூழலின் மூலம் கன உலோகங்கள் உடலினுள் சென்று, அதனால் விந்தணுவின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தவறான உள்ளாடை ஆய்வுகளில், இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் உள்ளாடையை தொடர்ச்சியாக ஆண்கள் அணிவதால், விதைப்பை பாதிப்பிற்குள்ளாகி, விந்தணு எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி, ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பெண்களுக்கு மட்டும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான். அதற்கு மருந்துகள் அல்லது இதர உடலியக்கங்கள் காரணமாக இருக்கலாம். மேலும் ஆண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் ஏற்பட்டால், அதனால் விந்தணு குறைபாடு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படும்.
மன அழுத்தம் மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையை ஆண்கள் வாழ்ந்து வந்தால், அதனால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தூண்டப்பட்டு, மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். ஆகவே ஆண்கள் எப்போதும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.
உணவுப் பழக்கவழக்கங்கள் ஆண்களின் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஏனெனில் ஆரோக்கியமற்ற உணவுகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளும் ஆண்களின் கருவளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.