Home ஆரோக்கியம் ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய்கள்… என்ன செய்தால் குணமாகும்?…

ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய்கள்… என்ன செய்தால் குணமாகும்?…

27

பொதுவாக உடல்நலம், ஆரோக்கியம், நோய்த்தொற்றுக்கள், பல்வேறு விதமான நோய்கள் அனைத்தும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனியே சில பிரத்யேகமான நோய்களும் உண்டு.

அப்படி ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் நம்முடைய பாரம்பரியத்திலேயே உண்டு.

நீர் பிரிதலில் சிக்கல் – தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாதல் – கரிசலாங்கண்ணி கீரையின் சாறை வாரம் ஒருமுறை குடித்துவர எரிச்சல் குறையும்.

விந்து வெளியேறல் – ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.

ஆண்மைக் குறைவு – இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.

வெள்ளைப்படுதல் – வெள்ளைப்படுதல் என்பது பெண்களுக்கானது என்று நினைத்துவிட வேண்டாம். இந்த பிரச்னை இருவருக்குமே உண்டு. அதேசமயம் இரண்டுக்கும் வேறுபாடும் உண்டு.

ஆண்களுக்கு உண்டாகிற வெள்ளைப்படுதலை குணப்படுத்த பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.