Home பாலியல் ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க மலிவான வயாக்கரா !!

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க மலிவான வயாக்கரா !!

49

ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மலிவான வயாக்கரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.

ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

லைகோபின் சக்தி

போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தினம் ஒரு கப் தக்காளி சூப் இரண்டு வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ஆய்விற்குட் படுத்தப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருந்தது இது ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்தது.

தினம் ஒரு கப் சூப்

தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது..

சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் – அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் – வராம தவிர்க்கலாம்ல..

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சோள மாவு – 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.

7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.