Home ஆண்கள் ஆண்களின் வீராப்பும், பெண்களின் மாராப்பும்…!!!

ஆண்களின் வீராப்பும், பெண்களின் மாராப்பும்…!!!

37

13-1444733713-menhatethesebedroomblundersஆண்மையின் குணமும், பெண்மையின் பண்பும் வர வர காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் உணர வேண்டிய உண்மை, மற்றும் நிதர்சனமும் கூட. இந்தியா எனும் நாடு வீரம் விளைந்த நாடு என்று நாம் மார்தட்டிக் கொண்டாடினால் மட்டும் போதாது.

நாம் நேற்று வாழ்ந்த தலைவர்களின் வீரத்தை மட்டும் தான் நூறு சதவீதம் போற்றி வருகிறோம். இன்று? இன்றைய தினத்தின் தலைவர்கள் எங்கே? அவர்கள் யார்? திரையுலக நட்சத்திரங்கள் தான் உங்களை பொறுத்தவரையில் தலைவர்களா?

சமூக தாக்குதல்கள்

ஆம் என்பது தான் அப்பட்டமான உண்மை. முகப்புத்தகம், ட்விட்டர், வாட்ஸ்-அப் என அணைத்து சமூக தொடர்பு செயலிகளிலும் தனக்கு பிடித்த நடிகரை புகழ்ந்து பதிவேற்றம் செய்தல், பிடிக்காத நடிகரை இகழ்ந்து பதிவேற்றம் செய்தல் இதுதான் மிக மும்மரமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

பலன் என்ன

இதனால் நமக்கு வாய்க்கப் போகும் பலன் என்ன? லாபம் என்ன? இதனால் நமது வாழ்க்கையில் ஏதேனும் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளதா? என்றால் மொத்தத்திற்கும் சுழியம் என்ற பதில் மட்டுமே மிஞ்சும். பிறகு எதற்கு இப்படிப்பட்ட தாக்குதல்கள்.

கரையும் வீரம்

ஒருபுறம் ஆண்களின் வீரம் ஐ.டி, கிரிக்கெட், சினிமா என்று கரைந்துக் கொண்டிருக்கும் இதே சமையத்தில் தான் பெண்களின் மானம் மறைந்து வருகிறது, இல்லை இல்லை மறந்து வருகிறார்கள்.

குடும்பத்தின் நிலை

ஓர் வீட்டில் நூறு ஆண்கள் அவதூறு பெயர் பெற்றாலும் கூட அந்த குடும்பம் மறுநாளே தலை தூக்கிட வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால், ஓர் குடும்பத்தில் ஓர் பெண் அவதூறு பெயர் பெற்றாலும் அந்த பெண்ணின் குடும்பம் தலைத் தூக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

மேற்கத்திய மோகம்

மேற்கத்தியம் என்ற பெயரை சொல்லி தப்பித்துக் கொண்டும், தப்பு செய்துக் கொண்டும் இருக்கிறார்கள். காலச்சாரம் கால சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

முடிவு யார் கையில்?

இதற்கான முடிவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போதே தலை சுற்றுகிறது. இதற்கான முடிவு சத்தியமாக என்னிடம் இல்லை. ஆனால், நம்மிடம் இருக்கிறது!!