antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videosசேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் உண்டு. இது சினிமாப் பாட்டு. நிஜத்தில்,
ஆண்களின் வியர்வை வாடையை வைத்தே அவர்கள் எந்த மூடில் இருக்கிறார்கள் என்பதை பெண்கள் கரெக்டாக கணித்து விடுவார்களாம்.இதை மேலோட்டமாக இல்லாமல் ஒரு ஆய்வை நடத்திக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.ஆண்களின் மூடுக்கேற்ப அவர்களின் வியர்வை வாடை இருக்குமாம். அந்த வாடையை சரியாக கணிக்கும் மோப்ப சக்தியும், திறமையும் பெண்களுக்கு இருக்கிறதாம்.
ஆய்வுக்காக, 20 வயதுகளில் இருக்கும் 19 பெண்களிடம் இரு வகையான ஆண்களின் வியர்வை சாம்பிள்களைக் கொடுத்துள்ளனர். அது இரண்டு வகையான வியர்வை சாம்பிள்கள். ஒன்று சாதாரணமான வியர்வை, இன்னொன்று செக்ஸ் மூடில் இருந்தபோது எடுக்கப்பட்ட வியர்வை சாம்பிள்.
இந்த வியர்வையை எங்கிருந்து எடுத்தார்கள் தெரியுமா. அங்கிருந்துதான்..அதாவது அக்குளிலிருந்து!.
இந்த வியர்வை சாம்பிளை கலெக்ட் செய்வதற்காக, முதலில் கல்வி சம்பந்தப்பட்ட, 20 நிமிடம் ஓடும் வீடியோவை பார்க்க வைத்துள்ளனர் அந்த ஆண்களை. அப்போது ஆண்களிடம் ஏற்பட்ட வியர்வை சாம்பிளாக சேகரிக்கப்பட்டது.
பின்னர் அடுத்த 20 நிமிடம் செக்ஸ் படத்தை ஓட விட்டு பார்க்க வைத்தனர். அப்போது கிடைத்த வியர்வை செக்ஸ் மூடில் இருந்ததாக வரிசைப்படுத்தப்பட்டது. இந்த வியர்வை சாம்பிள்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிடம் கொடுத்தனர்.
ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், இந்த வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வாளர்கள் கண்காணித்தனர்.
பெண்கள் வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லையாம். ஆனால் அவர்களின் மூளை பல்வேறு விதமாக ரெஸ்பான்ட் செய்துள்ளது.
அதுகுறித்து ஆய்வுக் குழுவின் தலைவரான டெக்ஸாஸ் ரைஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டெனிஸ் சென் கூறுகையில், ஆண்கள் செக்ஸ் மூடில் இருந்தபோது சேகரித்த வியர்வையை பெண்கள் நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளையின் பல இடங்கள் தூண்டுவிக்கப்பட்டன.
அதேபோல சாதாரண வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது எந்தவகையான ரியாக்ஷனும் மூளையில் காணப்படவில்லை என்கிறார்.
இது அமெரிக்க ஆய்வு. இதை சாக்காக வைத்துக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க பெண்கள் அருகே போய் நின்று கையைத் தூக்கி விடாதீர்கள். ‘ஒரு டஜன் லைப்பாய்’ சோப்பைக் கையில் கொடுத்து அனுப்பி வைத்து விடுவார்கள்…!