Home பாலியல் ஆண், பெண் பிரமச்சாரிகளுக்குள் புகுந்து விளையாடும் உணர்வு எது? விடை தெரியுமா?

ஆண், பெண் பிரமச்சாரிகளுக்குள் புகுந்து விளையாடும் உணர்வு எது? விடை தெரியுமா?

27

lesibian_002ஓரினச்சேர்க்கை விலங்குகளும் அறிந்திராத, இயற்கை விரோத செயல்.

ஓரினச்சேர்க்கை சுபாவம் கொண்டவர்கள், அது சார்ந்த எண்ணங்களை வெளிக்காட்டிகொள்ளவே ஒரு காலத்தில் வெட்கப்பட்டார்கள்.

அதனால், அவர்களை போன்ற ரசனை உடையவர்களை அடையாளம் கண்டுகொள்வதில் சிரமம் இருந்தது.

சட்டமும், சமுதாயமும் இந்த இயற்கைக்கு முரணான செயலை அருவெறுப்போடு பார்த்ததால் பெரிய குற்றமாகவும் தண்டனை வழங்கி வந்துள்ளது.

காலப்போக்கில் ஓரினச்சேர்க்கை பிரியர்கள் உலகளாவிய ரீதியில் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

தனித்தனியாக வாழ்ந்த அவர்கள், கூட்டமாக தங்கள் நாட்டின் அரசுக்கே கோரிக்கையை முன் வைக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஓரினத்துக்குள் உறவு கொள்ளும் ஆசை வருவது, உள்ளுக்குள் நடக்கிற ஹார்மோன் பிரச்சனைகள் தான் என்று மருத்துவமும் கூறுகிறது.

அயர்லாந்தில் மே 23 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாக 12 லட்சத்து 1607 பேர் வாக்களித்தனர்.

அதன் மூலம், ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும் முதல் நாடு என்ற பெருமையை அயர்லாந்து பெற்றது.

அடுத்தபடியாக அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த யூன் 27 ஆம் திகதி ஒரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் விருப்பம் போல திருமணம் செய்கொண்டு வாழலாம் என்றும் அவர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்படும் என தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே இந்தியாவிலும் மத்திய அரசு ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான நிலையை சட்டபூர்வமாக கொண்டுவரப் போவதாக சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரின் விருப்பங்களிலும் எவ்வளவோ மாறுபாடுகள் இருக்கலாம் வினோதங்கள் இருக்கலாம் அவற்றில் சில அருவெறுப்பானதாகக் கூட இருக்கலாம்.

அவற்றை நாம் பின்பற்ற வேண்டியதில்லை, ஆனால், மதிப்பது தவறில்லை என்ற மனநிலையே ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்துள்ள நாடுகளின் நடவடிக்கைகளில் தெரிகிறது.

ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தை படைத்த இறைவன் ஏன் திருநங்கைகள் என்ற மூன்றாவது பாலினத்தையும் படைக்க வேண்டும்?

பருவத்தில் காதல்தான் ஏக்கம் திருமணம்தான் வாழ்க்கை என்று இருக்கையில், ஆண் பிரம்மச்சாரிகளுக்குள்ளும் பெண் பிரம்மாச்சாரிகளுக்குள்ளும் புகுந்து விளையாடும் உணர்வுதான் எது?

இந்த கேள்விகளுக்கு விடைதெரிந்தவர்களுக்கு தெரியும், ஓரினச்சேர்க்கை உணர்வும் இயற்கையானதே. சுற்றிவளைக்காமல் சொன்னால் அதுவும் கடவுள் கொடுத்ததே.

சராசரி மனித உணர்வுகளைவிட, தகாத உறவுகள் தரம் தாழ்ந்ததுதான்.

ஆனாலும், அந்த உணர்வுகளும் பூமியில் தஞ்சமடைய தகுந்ததவைதான்…