பாலுணர்வு
தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போ கும்போது ஒரு பெண் பிள்ளை உங்கள் கண்களில் படுகிறாள். உங்களுக்குள் ஏதோ ஆர்வம். தினமும் கவனிக்கிறீர்கள். ஒருநாள்அவ ள் நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள். சற்று துடிப்பான பெண் என்றால் ஹாய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்று வைப்போம்.
உங்கள்உடல்சிலிர்க்கிறது. முகத்தில் வியர்வை அரும்புகிறது. உங்கள் நெஞ்சுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன. கனவுகளில் அவள் குட்டைப் பாவாடை எகிறிப் பறக்க, மலர்ந்து நடனமாடுகிறாள்.
இரவு படுக்கப் போகும்போதும் அவள் நினைவு அருட்டுகிற து. அடுத்த சில நாட்களுக்கு அவளது நினைவு அடிக்கடி வருகிறது. “ஏன் இப்படி நினைவு வருகிறது. இது என்ன உணர்வு” இது ஒரு ஈர்ப்பு. பாலியல் ரீதியானது. ஆனால் பாலுணர்வு அல்ல. தெளிவாகப் புரியச் சற்றுக் காலம் எடுக்கும்.
அதே நேரம் உங்கள் நண்பன் ற்றொரு பெண்ணின் அழகு பற்றி நாள் முழுக்கப் பேசுவான். அவளது குணங்களை மெச்சுவான். ஆனால் உங்களுக்கு அவை ஆர்வம் ஊட்டுவதாக இருக்காது. காரணம் என்னவெனில் ஒவ்வொரு வருக்கும் அவருக்கே உரிய விருப்பு வெறுப்புகள் உள்ளன. கவர்ச்சிகள் உள்ளன.
அதனால் அவனை அருட்டியவள் உங்களுக்கு துச்சமாகப்படலாம்.
விரும்பிய ஒருவரைப்பற்றி மீள மீள நினைப்பது அப்பருவ காலத்திற்கா ன உணர்வுதான்.
இதற்குக் காரணம் என்ன? உங்கள் உடலிலுள்ள சில ஹ ர்மோன்கள் அதிகம் சுரக்க ஆரம்பி த்துவிட்டன.
அதனால் உங்கள் உணர்வுகள் வலு ப்பெறுகின்றன. இதனால் குழப்பமடைய வேண்டியதில்லை.
வாழ்க்கையின் ஒரு புது வட்டத்திற் குள் நீங்கள் நுழைகிறீர்கள் எனலாம்.